தனியாக இருக்கும்போது எடுத்த போட்டோ! தளபதிக்கு வாழ்த்து சொல்லறேன்னு போட்டோவை ரிலீஸ் செய்த த்ரிஷா!

சென்னை: தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் படம் ரிலீசாகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழாக்கோலமாக மாறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகின்றார். நேற்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இவருக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தனது கட்சியினரை தனது பிறந்த நாள் கொண்ட்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என உத்தரவு பிறபித்த விஜய், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளையும் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டிருந்தார்.

Trisha Vijay Birthday Vijay Thalapathy Vijay LEO Movie 50

இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. ஒரு சில இடங்களில் ரசிகர்கள் மட்டும் கொண்டாடினர். தி கோட் படத்தின் கிளிம்ஸ், இரண்டாவது பாடல் ரிலீஸ் எனவும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்களான கில்லி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், கத்தி உள்ளிட்ட படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.

Trisha Vijay Birthday Vijay Thalapathy Vijay LEO Movie 50

விஜய் 50: இப்படியான நிலையில் தி கோட் படக்குழுவினர் தனித்தனியாகவும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார். உலக நாயகன் கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், " அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Trisha Vijay Birthday Vijay Thalapathy Vijay LEO Movie 50

மடல் எழுதிய சீமான்: அதேபோல், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!

Trisha Vijay Birthday Vijay Thalapathy Vijay LEO Movie 50

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!" என பெரிய மடலே எழுதியிருந்தார்.

த்ரிஷா வாழ்த்து: இந்நிலையில், நடிகை த்ரிஷா நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதில், "The calm to a storm,The storm to a calm! To many more milestones ahead" எனக் குறிப்பிட்டு, லியோ படத்தின் படப்பிடிப்பின்போது லிஃப்ட்டுக்குள் இருவர் மட்டும் இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நேற்றைய பிறந்த நாளுக்கு த்ரிஷா இன்று வாழ்த்து சொன்னாலும் சிலர் லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லி இருக்காங்கப்பா என கமெண்ட் செய்தும் வருகின்றனர். இந்த புகைப்படம் இதுவரை இணையத்தில் வெளியாகாத புகைப்படம் என்பதால் ரசிகர்கள் இதுபோல எத்தனை போட்டோஸ் உங்களிடம் உள்ளது. அனைத்து போட்டோக்களையும் தயவு செய்து வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X