புதிய ஃபிரண்டுடன் படு நெருக்கமாய் த்ரிஷா.. பதறிய ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகை திரிஷா தனது புதிய ஃபிரண்டுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

ரஜினிக்காந்த், கமல், அஜித், விஜய், தனுஷ். விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் சிம்புவுடன்

நடிகர் சிம்புவுடன்

கடைசியாக நடிகர் ரஜினிக்காந்துடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. அதன் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் முன்னோட்டமாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இந்தக் குறும்படம் திருமணத்திற்கு மீறிய உறவுகளையும் கள்ளக்காதலையும் ஆதரிக்கிறதா என ரசிகர்கள் கழுவி ஊற்றினர். இருந்தப் போதும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் இந்த குறும்படத்தை கொண்டாடினர்.

கைவசம் படங்கள்

கைவசம் படங்கள்

நடிகை த்ரிஷா தற்போது பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் ராம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

சமீபத்தில் திருமணம்

சமீபத்தில் திருமணம்

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திரிஷாவின் முன்னாள் காதலரான ராணா டகுபதிக்கு திருமணம் ஆனது. தனது காதலியான இன்டீரியர் டிசைனரை திருமணம் செய்து கொண்டார் ராணா டகுபதி.

புதிய நண்பர்

புதிய நண்பர்

ஆனால் திரிஷா இன்னும் தனது திருமணம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புதிய நண்பருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

டிவிட்டரில் போட்டோ

டிவிட்டரில் போட்டோ

இதனை பார்த்த் ரசிகர்கள் பதறி போயுள்ளனர். அது த்ரிஷாவின் பூ என்ற குதிரைதான். குதிரைக்கு அருகிலேயே நெருக்கமாய் நிற்கிறார் த்ரிஷா. பூ உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹாய் சொல்லுங்கள்

ஹாய் சொல்லுங்கள்

இதனை பார்த்த ரசிகர்கள், அய்யோ பார்த்து உதைத்து விட போகிறது என அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த போட்டோவுக்கு என்னுடை பூவுக்கும் ஹாய் சொல்லுங்கள் என குறிப்பிட்டு கேப்ஷன் கொடுதுள்ளார் த்ரிஷா. இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X