தங்களை காதலிப்பவர்கள் மட்டுமே இப்படி செய்ய முடியும்.. செம்ம வைபில் திரிஷா!

சென்னை: நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் மூலம் மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளார். இந்த படங்களில் குந்தவை என்ற கேரக்டரில் தன்னுடைய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமிழில் திரிஷா விஜய்யுடன் கோட், லியோ படங்களில் அடுத்தடுத்து நடித்து முடித்துள்ளார். இதனிடையே அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்துவரும் திரிஷா, கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

trisha vidaamuyarchi movie instagram

நடிகை திரிஷா: நடிகை திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் சிறப்பாகவே அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணியில் நடைபோட்டு வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் அவர் நடித்த லியோ படமும் இந்த ஆண்டில் விஜயுடன் நடித்த கோட் படமும் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது, இரண்டு படங்களுமே திரிஷாவின் கேரக்டர்களை மிகச் சிறப்பாக ரசிகர்களிடையே கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் நடிகர் கமல்ஹாசனுடனும் தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்: தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் திரிஷாவின் கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்துள்ளன. இதில் குந்தவை கேரக்டரில் திரிஷா அழகாகவும் மாஸாகவும் காணப்பட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் திரிஷா. இந்நிலையில் திரிஷாவிற்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளன. படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வந்த போதிலும் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில் இருந்தும் தவறாமல் உள்ளார் திரிஷா.

trisha vidaamuyarchi movie instagram

சுற்றுலா கொண்டாட்டத்தில் திரிஷா: மலை பாங்கான பகுதிகளில் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபடுவது அவருக்கு மிகச் சிறப்பான ஒன்றாக உள்ளது. அவ்வாறு மலைப்பிரதேசத்தில் தான் மேற்கொண்ட சுற்றுலா பயணத்தின் புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா. மேலும் தன்னைத்தானே நேசித்தால் மட்டுமே இத்தகைய இடங்களுக்கு செல்ல முடியும் என்றும் அவர் தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் தனியாகவும் சிறுவன் ஒருவனுடன் இணைந்தும் புகைப்படங்களை திரிஷா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் திரிஷாவின் அழகு அள்ளுகிறது.

ஸ்டைலிஷ் தமிழச்சி திரிஷா: இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா என்று பல தரப்பினரும் தொடர்ந்து திரிஷாவிடம் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் தற்போதைய கெட்டப்பிலும் திரிஷா கருப்பு நிற உடையில் மிகவும் க்யூட்டாக உள்ளார். கூலர்சுடன் இந்தப் புகைப்படங்களில் அவர் காணப்படும் நிலையில், அவருடைய கலருக்கு இந்த உடை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் மலை உச்சியில் சிகரங்களுக்கு சிகரம் வைத்தாற்போல இந்தப் புகைப்படங்களில் திரிஷா காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X