Trisha: திரிஷா கேரியரில் சிறப்பாக அமையவுள்ள 2025.. 6 படங்கள் ரிலீஸ் கொல மாஸாக காத்திருக்கும் குந்தவை
சென்னை: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்த சினிமாவில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது விஜய், அஜித், சூர்யா என லீடிங் நாயகர்களுடன் இணைந்து நடித்து வரும் திரிஷா. நடிப்பில் அடுத்த ஆண்டில் மட்டுமே ஆறு படங்கள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தன்னுடைய ரீ என்ட்ரியை சிறப்பாக்கி கொண்டுள்ள திரிஷா அடுத்தடுத்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அவரது இந்த ஆறு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படங்களாகவே அமைந்துள்ளன. அஜித், சிம்பு, கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்கள் இதில் அடக்கம்.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மல்லுவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்து வருகின்றன. விஜய் -திரிஷா கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோட் படம் வசூலில் சிறப்பாக அமைந்தது. இதில் நாயகிகளாக சினேகா. மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்த போதிலும் திரிஷா -விஜய் காம்பினேஷனில் வெளியான மட்ட பாடல் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடல் தான் அதிகமான வரவேற்பையும் பெற்றது.
அடுத்தடுத்த படங்கள்: கடந்த ஆண்டிலும் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் திரிஷா இணைந்துள்ள விடாமுயற்சி படம் வரும் ஜனவரி மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது இதே போல அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் -சிம்பு கூட்டணியில் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்திலும் லீட் கேரக்டரில் திரிஷா நடித்துள்ளார். அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக இந்தப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் 6 படங்கள்: இந்நிலையில் சூர்யா -ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 45 படம் அடுத்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் அடுத்தடுத்த மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களான ஐடென்டிடி, விஷ்வம்பரா படங்களும் அடுதத ஆண்டில் ரிலீசாகவுள்ளன. அடுத்த ஆண்டிலேயே திரிஷாவின் அடுத்தடுத்த படங்கள் என ஆறு படங்கள் குறைந்த இடைவெளிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் திரிஷா மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
திரிஷாவின் குந்தவை கேரக்டர்: திரிஷா 20 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ள நிலையில் அவரது பல படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அந்த வகையில் அவரது பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, மோகினி, வர்ஷம், கட்டா மீத்தா போன்ற படங்கள் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தன. விஜய்யுடன் முன்னதாக நடித்த கில்லி போன்ற படங்களையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம். தற்போதும் மாசாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் குந்தவை கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டது.


Click it and Unblock the Notifications











