Actress Trisha: வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா?.. மீண்டும் மிரர் செல்ஃபி!
சென்னை: நடிகை திரிஷா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷா இடையிலான கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார்.
தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த திரிஷாவிற்கு, இடையில் சில காலங்கள் மார்க்கெட் டல்லடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடைய ரீ-என்ட்ரி சிறப்பாக அமைந்து வருகிறது.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள திரிஷா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இடையில் சிறிது காலங்கள் இவரது மார்க்கெட் டல்லடித்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
திரிஷா ரீ-என்ட்ரி: தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2விலும் திரிஷாவின் குந்தவை கேரக்டர் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது தன்னுடைய கேரியரை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் திரிஷா. கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் ஜோடி போட்டு நடித்த திரிஷா தற்போது விஜய்யுடனேயே தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ கேரக்டரிலும் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் கமலஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளிலும் இவர் சிக்கினாலும் தன்னுடைய கேரியர் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடந்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா. டோவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளதை பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படும் திரிஷா அடுத்தடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது திரிஷா வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்தில் மிகவும் அழகான தோற்றத்தில் திரிஷா காணப்படுவது ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
மீண்டும் மிரர் செல்ஃபி: கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய்யுடன் இருக்கும்படியான மிரர் செல்ஃபியை வெளியிட்டிருந்தார் திரிஷா. இதையடுத்து இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் தற்போது மீண்டும் தான் தனியாக இருக்கும்படியான செல்ஃபியை வெளியிட்டுள்ளார். மேலும் Ukiyo என்று அந்தப் பதிவில் திரிஷா குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய வார்த்தையான இதற்கு Floating world என்று அர்த்தம். எவை குறித்தும் கவலை கொள்ளாமல் தனியாக இருப்பதை இந்த வார்த்தை குறிப்பிடுகிறது. இந்நிலையில் தன்மீதான கிசுகிசுவிற்குதான் திரிஷா பதிலடி கொடுத்துள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











