திரிஷாவின் வாழ்க்கை மாறிய நாள்.. 25 வருஷம் ஆயிடுச்சா.. மலரும் நினைவுகளில் மூழ்கிய குந்தவை?

சென்னை: நடிகை திரிஷா கடந்த 1999ம் ஆண்டில் மிஸ் சென்னை ஆக டைட்டிலை வென்றவர். தொடர்ந்து சினிமாவில் களமிறங்கிய அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியில் விஜய், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவருகிறார்.

அடுத்தடுத்து விஜய்யின் லியோ மற்றும் கோட் படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனுடன் தக் லைஃப் மற்றும் அஜித்துடன் விடாமுயற்சி படங்களிலும் நடித்துள்ளார் திரிஷா. இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

trisha instagram tamil cinema

நடிகை திரிஷா: நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இதே போல தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் திரிஷா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள நிலையில் பான் இந்தியா நடிகையாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில காலங்கள் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு தற்போது ரீ என்ட்ரியாக அடுத்தடுத்த படங்கள் கைவசம் உள்ளன.

அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களில் குந்தவை கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதை சிறையிட்ட திரிஷாவிற்கு, இந்த படங்கள் மற்றும் அவரது கேரக்டர் எவர்கிரீனாக ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போது அடுத்தடுத்து விஜய்யின் லியோ மற்றும் கோட் படங்களில் நடித்துள்ள திரிஷா, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைஃப் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

trisha instagram tamil cinema

சுற்றுலா கொண்டாட்டம்: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் திரிஷா. மலையாளத்தில் டொவினோ தாமசுடன் திரிஷா நடித்துள்ள படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் திரிஷா, அடுத்தடுத்து தான் வெளிநாடுகளுக்கு செல்லும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் இவர் தனித்தீவில் உற்சாகத்துடன் தன்னுடைய சுற்றுலாவை கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டின.

25 ஆண்டு கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது இவர் கடந்த 1999ம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டம் பெற்ற நிகழ்வின் செய்தித்தாள் தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் பட்டத்தை வென்றதன் 25வது ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி இந்த செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள் என்றும் திரிஷா குறிப்பிட்டுள்ளார். 40 வயதை நெருங்கிய நிலையிலும் துவக்கத்தில் பார்த்ததை போலவே தற்போதும் தன்னுடைய அழகையும் இளமையையும் சரியாக பராமரித்து வருகிறார் திரிஷா. இன்னும் சில ஆண்டுகள் அவரை யாரும் அசைக்க முடியாது என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X