Actress Trisha: என்ன விலை அழகே.. திரிஷாவின் சிரிப்பில் மயங்கிப்போன ரசிகர்கள்!
சென்னை: நடிகை திரிஷா அடுத்தடுத்து விஜய். அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார் திரிஷா. தற்போது மீண்டும் அவரது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைஃப் படங்களிலும் திரிஷா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் திரிஷா விரைவில் பாலிவுட்டில் சல்மான் கானுடன் ஜோடி சேர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா பல ஆண்டுகளாக தொடர்ந்து தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி பட நாயகியாக விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் திரிஷா இணைந்திருந்த லியோ படம் வெளியாகி சிறப்பான வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ கேரக்டரில் திரிஷா நடித்துள்ளார். தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.

திரிஷா ரீ-என்ட்ரி: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் திரிஷா, விரைவில் இந்தி மொழியிலும் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் என நடித்து வந்த திரிஷாவுக்கு இடையில் சில காலங்கள் பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டன. இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த திரிஷா, குந்தவை கேரக்டரில் மிரட்டியிருந்தார். தொடர்ந்து இந்த படத்தின் 2வது பாகமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: இந்நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் திரிஷா. தற்போது அவர் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் அவரது அழகான சிரிப்பு ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை கொடுத்து வருகிறது. திரிஷாவிற்கு வயதே ஆகாதா என்ற கேள்வியை இந்தப் புகைப்படங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ள வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலய் திருமணத்தில் பங்கேற்ற திரிஷா இந்த உடையில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி திருமணத்தில் பங்கேற்ற திரிஷா: இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷா, திடீரென வரலட்சுமியின் கன்னத்தில் முத்தங்களை பதித்திருந்தார். இநதப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இதனிடையே நாம் எந்த உடையையாவது அணியாமல் நிறுத்துவதற்கு காரணங்களாக மற்றவர்கள் கருத்துக்கள் இருப்பதாகவும் கேப்ஷனில் திரிஷா தெரிவித்துள்ளார். மிகச்சிறப்பான லைட்டிங்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் கொள்ளை அழகில் திரிஷா காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











