»   »  என் கைப்பையை எலி கடித்துக் குதறிவிட்டது: ரயில்வே அமைச்சரிடம் நடிகை புகார்

என் கைப்பையை எலி கடித்துக் குதறிவிட்டது: ரயில்வே அமைச்சரிடம் நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் சென்றபோது தனது கைப்பையை எலி கடித்துக் குதறியது குறித்து பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரவிடம் ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார்.

பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப். அவர் கடந்த 22ம் தேதி லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தனது கைப்பையை தலைக்கு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.

Actress Tweeted Suresh Prabhu About Rats In First Class. Bag Destroyed.

திடீர் என்று எலி சப்தம் கேட்டு கண் விழித்து பார்த்துள்ளார். பார்த்தால் தலைக்கு அருகில் இருந்த அவரது கைப்பையை எலி கடித்துக் குதறியுள்ளது.

உடனே அவர் தனது கைப்பையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிவேதிதாவின் புகாரை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Popular Marathi actress Nivedita Saraf has complained that her bag was gnawed by rats while she was travelling by a train, prompting the railway administration to intensify the pest control measures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil