2வது திருமணம் செய்த நடிகை ஊர்வசி கர்ப்பம்
சென்னை: நடிகை ஊர்வசி கர்ப்பமாக இருப்பதால் அவரது 2வது கணவர் சிவபிரசாத் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
முந்தானை முடிச்சு, பாட்டிசொல்லை தட்டாதே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ஊர்வசி . இவருக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் திருமணமானது. ஆனால் 2008ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வதாக திருமணம் செய்தார் ஊர்வசி. இரண்டாவது கணவருடனும் தனது முதல் குழந்தையுடன் வாழ்ந்துவரும் 46 வயதான ஊர்வசி தற்போது 2வது கணவர் மூலமாக கர்ப்பமாகியுள்ளார்.

அவர் நான்கு மாத கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கணவர் சிவபிரசாத் தனது மனைவி கர்ப்பமாக உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரம் ஊர்வசியோ, விரைவில் நல்ல செய்தியை சொல்கிறேன் என்று கூறிவருகிறாராம்.


Click it and Unblock the Notifications











