அரை நிர்வாண ஆணுடன் லெஜன்ட் சரவணா ஹீரோயின்.. பகீர் கிளப்பும் போட்டோ!
சென்னை: லெஜன்ட் சரவணா படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவுட்டேலா அரை நிர்வாணமாக இருக்கும் ஆணுடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவுட்டேலா. ஏராளமான அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

விர்ஜின் பானுபிரியா
தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹேட் ஸ்டோரி 4, பாகல்பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா. கடைசியாக விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்தார்.

லெஜன்ட் சரவணா
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. தற்போது பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி. அதேபோல் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியா
இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஊர்வசி ரவுட்டேலா. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. நடிகை ஊர்வசி ரவுட்டேலா சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார்.

தனிக்கூட்டம்..
அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சத்தனம் இல்லாமல் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ரசிக்கவே தனிக் கூட்டம் உள்ளது.

கையில் சரக்குடன்
அண்மையில் ரெட் கலர் கவுனில் கையில் சரக்குடன் ஊர்வசி ரவுட்டேலா போஸ் கொடுத்த போட்டோ இணையத்தை திணறடித்தது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அதிர விட்டுள்ளார்.

அரை நிர்வாணமாக..
அதாவது நெருக்கமான காட்சியில் நடிக்கும் ஊர்வசி ரவுட்டேலா, சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக இருக்கும் ஆண் ஒருவருடன் உள்ளார். தொடை தெரியும் படியான அரைகுறை உடையில் கிறங்க வைத்துள்ளார் ஊர்வசி. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்
ஹார்ட்டின் ஈமோஜிகளை அள்ளிக்குவித்துள்ள நெட்டிசன்கள் செம ஹாட் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை இதுவரை நான்கறை லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











