ஷகீலா அந்த மாதிரி நடிகையாக மாற இதுதான் காரணம்.. ஊர்வசி சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் ரொம்பவே ஃபேமஸாக இருந்தவர். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது என பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் ஷகீலா பிகிரேட் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம் என்று நடிகை ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 16ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

Actress Urvashi Talks about Shakeela At Latest Interview

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் ஷீத்தல் என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். சொந்தமாக யூட்யூப் சேனலையும் நடத்திவருகிறார்.

ஊர்வசி பேட்டி: இந்நிலையில் நடிகை ஊர்வசி சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷகீலா குறித்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ஷகீலா முதலில் தமிழ் படத்தில்தான் நடித்தார். நான் அதற்கான ஆலோசனையை கொடுத்தேன். அந்த சமயத்தில் கவர்ச்சி வேடத்தில் நடிக்கும் எந்த எண்ணமும் அவருக்கு இருக்கவில்லை. நன்றாக நடித்து நல்ல கலைஞராக மாற வேண்டும் என்பதுதான் ஷகீலாவின் ஆசை.

ஆனால் சில காரணங்களால் அந்தத் தடம் அப்படியே மாறிவிட்டது. குடும்ப சூழலுக்காக மட்டும்தான் அவர் பி கிரேட் படத்தில் நடித்தார். பின்னர் அதை எப்படியாவது விட்டுவிட்டு தனது அடையாளத்தை மாற்றுவதற்காக ரொம்பவே போராடினார்" என்றார். ஊர்வசி கூறிய இதே கருத்தை ஷகீலாவும் தான் அளித்த பல பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X