லாக்டவுன்குள்ள லாக்டவுனா? மோசமான யோசனை.. மேலும் பாழாக்கும்.. கூட்டத்தை பார்த்து கடுப்பான நடிகை!

சென்னை: ஏற்கனவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மோசமான யோசனை என பிரபல நடிகை விமர்சித்துள்ளார்.

Recommended Video

VaraLakshmi recent video | Indian Gas Agency | Delivery Girls & Boys

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஆனால் அதற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

இதனை காரணமாக காட்டி பெரும்பாலான இடங்களில் மக்கள் பொது இடங்களில் நடமாட தொடங்கிவிட்டனர். இதனால் கொரோனா, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுக்குள் வராமல் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

மார்க்கெட்டில் கூட்டம்

மார்க்கெட்டில் கூட்டம்

நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பால் இன்று காலை முதலே கூட்டம் கூட்டமாக கடைத் தெருவுகளில் குவிந்தனர். சோஷியல் டிஸ்டன்ஸ் என்ற விஷயத்தையே மறந்து மக்கள் மிகவும் நெருக்கமாக மார்க்கெட் பகுதிகளில் கூடியுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழல் எற்பட்டுள்ளது.

மோசமான யோசனை

மோசமான யோசனை

இந்நிலையில் இதுகுறித்து நடிகை வரலட்சுமி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கூட்டமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள வரலட்சுமி, லாக்டவுன்குள்ள லாக்டவுனா? இது மிகவும் மோசமான யோசனை, முற்றிலும் திட்டமிடப்படாத நடவடிக்கை.. இது மேலும் மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

நடிகை வரலட்சுமியின் இந்த கருத்தை பலரும் ஆதரித்துள்ளனர். வரலட்சுமியின் டிவிட்டை பார்த்த இந்த ரசிகர், 4 நாட்கள் முழு லாக்டவுன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் கூட பிரச்சனை ஆயிருக்காது.. இப்போ சூழ்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

இது எந்த ஏரியா?

இது எந்த ஏரியா?

வரலட்சுமி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப மோசமான விஷயம் நடந்திருக்குது. இது எந்த ஏரியா என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், இப்படி இருந்தால் வைரஸ் தொற்று கண்டிப்பாக வரும்.. உண்மைதான் என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X