vani bhojan: வாவ்.. என்ன அழகு.. அச்சு அசல் நயன்தாரா மாதிரியே இருக்கும் வாணி போஜன்!

சென்னை: பொதுவாக சினிமாவில் இருந்து படவாய்ப்பு வரவில்லை என்றால், வருமானத்திற்காக சில வயதான நடிகர்கள் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்குவார்கள். ஆனால், சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் வாணி போஜன். திரைப்படம், வெப் தொடர் என பிஸியான நடிகையாக இருக்கும் வாணி போஜன், இன்ஸ்டாகிராமில் அசத்தலான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யா என்கிற ரோலில் நடித்திருந்தார். 2012 முதல் பல தொலைக்காட்சிகளில் நாடகங்களில் நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். அதைத்தொடர்ந்து, ஜெயா டிவியில் மாயா என்கிற சீரியலில் நடித்தார் வாணி போஜன். ஆனால், அந்த சீரியல் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

vani bhojan instagram

நடிகை வாணி போஜன்: அதன் பின் தான், சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் பல கஷ்டங்களை தாண்டி தன் குடும்பத்தை உயர்த்தும் ஒரு தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த தொடர், 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஒளிபரப்பானது. அந்த தொடர் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த வாணி போஜனை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று கொண்டாடினார்கள்.

சினிமாவில் வாய்ப்பு: சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன் 2020ம் ஆண்டு வெளிவந்த ட்ரிபிள்ஸ் என்கிற வெப் தொடரில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின், அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. வழக்கமாக அவர் நடிக்கும் துணை கதாபாத்திரங்களாக இருக்கவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

அட்டகாசமான போட்டோஸ்: மலேசியா டு அம்னீசியா என்று பல படங்களில் வாணி போஜன் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை என்ற படமும் செங்களம் என்ற வெப் தொடரும் வெளியானது. தற்போது இவரின் கைவசம், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, அர்யன் போன்ற படங்கள் உள்ளன. இப்படி அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர், கருப்பு நிறத்தில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X