vani bhojan: ஒரே பார்வையில் கவர்ந்த வாணி போஜன்.. கருப்பு சேலையில் கில்லாடி லுக்!
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை தனித்துவமான பயணத்தை உருவாக்கிய நடிகை வாணி போஜன், தற்போது கருப்பு நிறத்தில் ஜொலிக்கும் சேலையில் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சற்றே கிளாமருடன், அதே நேரத்தில் எளிமையான லுக்கில் இருக்கும் அவரின் போட்டோஸ் இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று டிரெண்டாகி வருகிறது.
தெய்வமகள் சீரியலின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் மகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வாணி போஜன், அந்த கதாபாத்திரத்தின் மூலம் "சின்னத்திரை நயன்தாரா" என்ற பெயரையும் பெற்றார். அவரது இயல்பான நடிப்பு, மென்மையான முகபாவனை, குடும்ப கதாபாத்திரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் திறன் ஆகியவை அவரை வேகமாக பிரபலமாக்கியது.

நடிகை வாணி போஜன்: சின்னத்திரையில் வெற்றியை தொடர்ந்து, சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த அவர், ஓ மை கடவுளே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும், மிரள், அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகையாகவும், தன்னுடைய ரோல்களை கவனமாக தேர்வு செய்வதிலும் அவர் தனித்துவம் கொண்டவாக இருக்கிறார்.
வர்ணிக்கும் பேன்ஸ்: மாடலிங் துறையிலும் அனுபவம் கொண்ட வாணி போஜன், தனது கேரியரை ஏர் ஹோஸ்டஸாக தொடங்கி பின்னர் விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நடிப்புலகில் நுழைந்தார். கடின உழைப்பும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையும் தான் தனது வளர்ச்சிக்கு காரணம் என அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.' சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், அவ்வப்போது தனது போட்டோஷூட்கள், வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர், வெளியிட்டுள்ள கருப்பு சேலை லுக், எளிமையிலேயே எவ்வளவு அழகு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "கருப்பில் கலக்கிய குயின்", "சின்னத்திரை நயன்தாரா இன்னும் லெவல் அப்டேட்" போன்ற கமெண்ட்களால் அவரது அழகை பாராட்டி வருகின்றனர். வாணி போஜனின் இந்த புதிய லுக், ரசிகர்களிடையே தொடர்ந்து வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











