இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகை வாணி போஜன் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
Recommended Video
விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார்.

சின்னத்திரை நயன்தாரா
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தில் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கினார் . அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

மகான்
விக்ரமுடன் மகான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் வாணி போஜன் நடித்து இருந்தாலும் அவரது ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை. மகான் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் ஒரு தொடர்பில்லாமல் இருப்பதாக கேட்டார்,நானும் நீக்கிவிடுங்கள் என்று கூறிவிட்டேன் என தெரிவித்து இருந்தார்.

புடவையில் செம க்யூட்
இந்த படத்தில் அந்த காட்சி மட்டும் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் வாணி போஜனுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கு. இருப்பினும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தொடர்ந்து போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, தனது அழகான இடையழகை காட்டியபடி ஜோராக ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

ஏராளமான படங்களில்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், அட இது இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? என நெட்டிசன்ஸ் கலாய்ந்து வருகின்றனர். கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கும் அருள்வாய், காசிமேடு, மிரல், லவ், ஊர் குருவி என அரை டஜன் படங்களை வாணி போஜன் கைவசம் வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











