வெப் சீரிஸில் நடிக்கும் பிரபல சீரியல் நடிகை.. அதுவும் யாரோட தயாரிப்புன்னு பாருங்க!
சென்னை: பிரபல சீரியல் நடிகையான வாணி போஜன் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
Recommended Video
ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியலின்
மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். தொடர்ந்து விஜய் டிவியில் ஆகா, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் உட்பட பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வாணி போஜன்.
இந்நிலையில் வாணி போஜன் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸை, முருகதாஸின் துணை இயக்குநர் ஒருவர் இயக்கி வருகிறார்.

தற்போது லாக்டவுன் காரணமாக வெப் சீரிஸின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து இயல்பு நிலை திரும்பிய பின் சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் வாணி போஜன் தற்போது தமிழில் லாக் அப், மிஸ்டர் டபிள்யூ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











