Vani Bhojan: வாடாத மல்லிப்பூ.. வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்!
சென்னை : சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். தமிழில் ஓ மை கடவுளே படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமான வாணி போஜன், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டேவை ஷேர் செய்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் நடிகை வாணி போஜனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்த தொடரில் தாசில்தாராக, சத்யா என்ற கேரக்டரில் தன்னுடைய கணவன் பிரகாஷ் உள்பட அனைவரையும் அரவணைத்து செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார் வாணி போஜன். இந்தத் தொடர் துணிச்சலான பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடர் இவரை பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமாங்கியது.

வாணிபோஜன்: இந்தத் தொடரை தொடர்ந்து சில தொடர்களில் நடித்த வாணி போஜன். தெலுங்கில் 2019ம் ஆண்டில் வெளியான மீக்கு மாத்திரமே செப்தா என்ற படத்தின் மூலம் பெரியத் திரையில் அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இரணடாவது ஹீரோயினாக நடித்தாலும், இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படத்தின் நீளம் கருத்தி அந்த காட்சி டெலிட் செய்யப்பட்டுவிட்டது.

இணையத் தொடர்களில்: இதைத் தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர் ட்ரிப்பிள்ஸ், செங்களம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணைய தொடர்களிலும் நடித்துள்ளார். செங்களம் வெப் தொடரில் அரசியல் வாதியாக தனது கதை பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார். இந்த தொடர் இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.

வாவ் லவ்லி: பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, அர்யான், அஞ்சாமை என கணிசமான படங்களை கைவசம் வைத்து இருக்கும் இவர், சட்னி சாம்பார் என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில் அழகான ஸ்லீவ்லஸ் சுடிதாரில் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த சத்யாராஜின் மகள் திவ்யா லவ்லி என கமெண்ட் போட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











