Vani Bhojan : கடற்கரையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ்..ஹாட் பீட்டை எகிறவைத்த வாணி போஜன்!

சென்னை : நடிகை வாணி போஜன் கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஹாட்டான புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.

நடிகை வாணி போஜனை சின்னத்திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரை செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.

ஒரு சாயலில் இவரை பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பார்.

Actress vani bhojan latest beach photoshoot

வாணி போஜன் : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை வாணி போஜன் . ஏராளமான திரைப்படங்கள் மட்டுமில்லாமல், பல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வாணி போஜன் செங்களம் என்ற வெப் தொடர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த வெப் தொடரில் அரசியல்வாதியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரின் இவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது.

பரத்துடன் ஜோடி : பரத், வாணி போஜன் இருவரும் மிரள் என்ற படத்தில் நடித்த நிலையில், வாணிபோஜன், பரத் ஜோடி பேசப்பட்டதை அடுத்து, மீண்டும் இருவரும் தமபதிகளாக இணைந்து லவ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். காதலித்து திருமணம் செய்த தன் மனைவியை ஏதோ ஒரு பிரச்சினையில் கொலை செய்து விடுகிறார் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே லவ் திரைப்படத்தின் கதையாகும்.

Actress vani bhojan latest beach photoshoot

கைவசம் உள்ள படங்கள் : லவ் படத்தைத் தொடர்ந்து, ஊர்க்குருவி, பகைவனுக்கும் அருள்வாய், பாயுமொளி நீ எனக்கு, ரேக்ளா, ஆர்யன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கி படங்களிலும் நடித்து வருகிறார் வாணி போஜன்.

கடற்கரையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ் : இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு மலை போல் லைக்குள் குவிந்து வருகிறது. மேலும் வாணி போஜனின் தீவிர ரசிகர்கள் சிலர் அவரை வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.

Actress vani bhojan latest beach photoshoot

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X