வாவ்..இந்த அளவுக்கு இருக்கும்னு எதிர்பாக்கல.. வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்!

சென்னை: சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் நடிப்பில் மட்டும் கடந்த ஆண்டு 3 திரைப்படங்களும், ஒரு வெப் தொடரும் வெளியானது. அப்படி பிஸியான நடிகையாக இருக்கும் வாணி போஜன், இன்ஸ்டாகிராமில் கலக்கலான போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர். 2012 முதல் தொலைக்காட்சிகளில் நிறைய நாடகங்களில் நடித்துள்ள இவர், விஜய் டிவியில் வந்த ஆகா என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதன் பின் ஜெயா டிவியில் வெளியான மாயா என்கிற சீரியலில் நடித்தார் வாணி போஜன். ஆனால் மாயா சீரியல் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் பிறகு அது தொடராமல் போனது.

vani bhojan instagram

நடிகை வாணி போஜன்: அதனை தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்கிற சீரியலில் நடித்தார் வாணி போஜன். 2013ம் ஆண்டு ஆரம்பமான அந்த சீரியல் 2018 வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பான. அந்த சீரியலில் பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தர். அந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை அடுத்து அதன் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார் வாணி போஜன்.

திரைப்படத்தில்: 2020இல் வெளிவந்த ட்ரிபிள்ஸ் என்கிற சீரியஸில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் வாணி போஜன். அதனை தொடர்ந்து அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. வழக்கமாக அவர் நடிக்கும் துணை கதாபாத்திரங்களாக இருக்கவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

பிளாக் அண்ட் பிளாக்: மலேசியா டு அம்னீசியா என்று பல திரைப்படங்களில் நடித்த வாணி போஜன் அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை என்ற திரைப்படமும் செங்களம் என்ற வெப் தொடர் வெளியானது. தற்போது இவரின் கைவசம், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, அர்யன் போன்ற திரைப்படங்கள் கைவசம் உள்ளன. இப்படி அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் வாணிபோஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் அண்ட் பிளாக் நிறத்தில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X