அட என்ன அழகு..இதை பார்க்க நாங்க என்ன புண்ணியம் பண்ணமோ..வாணி போஜன் பார்த்து உருகும் பேன்ஸ்!

சென்னை : வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வாணிபோஜன் இன்ஸ்டாகிராமில், விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.

விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார்.

வாணி போஜன்

வாணி போஜன்

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரியை கொடுத்து ஜொலிக்கத் தொடங்கினார் . அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. விக்ரமுடன் மகான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

தற்போது வாணி போஜன் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது. திருட்டு விசிடி காலம் தொடங்கி, இன்றைய டொரன்ட், டார்க் வெப் வரை திரைப்படங்களைத் திருட்டு வீடியோவாக வெளியிட்டு வருமானம் பார்க்கும் கும்பலை, திரையுலகம் உட்பட எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. 8 எபிசோடுங்கள் கொண்ட இந்த தொடரில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

சின்னத்திரை நயன்தாரா என அன்போடு அழைக்கப்பட்டு வந்த வாணி போஜன் தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், உள்பட சுமார் பல படங்கள் இவரது கைவசம் வைத்திருந்தார். அன்பு, ஊர் குருவி, ரேக்லா, ஆரியன், ஜெய்யுடன் இணைந்து ஒரு படம் என தற்போதும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மஞ்சள் பேபி

மஞ்சள் பேபி

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன், மஞ்சள் நிற சேலையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போடடோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வரும் நிலையில், பல ரசிகர்கள் அட என்ன அழகு..இதை பார்க்க நாங்க என்ன புண்ணியம் பண்ணமோ என கேட்டு, நடிகை வாணி போஜனை பார்த்து பார்த்து உருகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X