Vani bhojan Net worth: 2500 சம்பளம் வாங்கிய வாணி போஜன்.. இப்போது எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா?

சென்னை: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்று தான் பலருக்கு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வாணி போஜன் உண்மையிலேயே சினிமாவில் ஒரு படத்தில் நடித்துவிட்டு அந்த படம் தோல்வி அடைந்த பிறகு தான் சின்னத்திரைக்கு சென்று. அதன் பிறகு தான் தற்போது வெள்ளி திரையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 37 வயதாகும் வாணி போஜனின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சின்னத்திரை நயன்தாரா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜனின் சொந்த ஊர் ஊட்டி. அங்கு கவர்மெண்ட் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி ஏ இங்கிலீஷ் பட்ட படிப்பு படித்த வாணி போஜன், ஏர் ஹோஸ்டஸ் ட்ரெயினிங் முடித்துவிட்டு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது வாணி போஜன் வாங்கிய சம்பளம் வெறும் 2500 மட்டுமே.

vani bhojan net worth

சினிமாவில் ஆர்வம்: நடிகை வாணி போஜனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்ததால், அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அப்பொழுது தான் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பின் மூலமாக சினிமாவில் நுழைந்த அவர், ஊர் இரவு என்ற தமிழ் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது.

சின்னத்திரையில்: இதைத்தொடர்ந்து சீரியல் பக்கம் வந்த வாணி போஜன், விஜய் டிவியில் ஆஹா என்ற தொடரிலும், ஜெயா டிவியில் மாயா என்ற சீரியலிலும் சிறு வேடத்தில் நடித்து வந்தார். அப்போது தான் அவருக்கு சன் தொலைக்காட்சிகள் தெய்வமகள் சீரியலில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்தது. அந்த தொடரில், சத்யா என்ற கேரக்டரில் நடித்து இல்லத்தரிசிகளின் மனதில் இடம் பிடித்தார் வாணி போஜன்.அந்த கதாபாத்திரம் பேசும்படி இருந்ததால் இவருக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளித்திரையில்: அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மகான் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சியை படம் வெளியாவதற்கு முன்பாகவே எடிட் செய்து டெலிட் செய்யப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் பட வாய்ப்பு தேடி அலைந்த வாணி போஜன் லாக் அப், மலேசியா டு அனிமேஷன், பாயும் புலி போன்ற படத்தில் நடித்தார். கடைசியாக இவர் அஞ்சாமை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சொத்து மதிப்பு: தற்போது வாணி போஜனின் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இந்நிலையில் வாணி போஜனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வாணி போஜனுக்கு 7 கோடி ரூபாய் சொத்து உள்ளது என கூறப்படுகிறது. அவர் ஒரு படத்திற்கு 50 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், வெப் தொடருக்கு 40 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஏர் ஹோஸ்டஸாக வெறும் 2500 ரூபாய் சம்பளம் வாங்கி வந்த வாணி போஜன் தற்போது 7 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X