நடிகை வாணி போஜன் முகத்துல புதுசா டாலடிக்குதே.. என்னன்னு பாத்தீங்களா?

சென்னை: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவே தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க, அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திய வாணி போஜன் அசோக் செல்வன், பரத் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.

ஓ மை கடவுளே படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள வாணி போஜன் முன்னதாகவே சில தெலுங்குப்படங்களிலும் நடித்து ரசிக்களை கவர்ந்திருநதார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரத்துடன் வாணி போஜன் இணைந்து நடித்திருந்த லவ் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று இருந்தது.

vani bhojan instagram tamil cinema

நடிகை வாணி போஜன்: நடிகை வாணி போஜன் சீரியல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக சன் டிவியில் இவர் நடித்த தெய்வமகள் சீரியலில் சத்யாவாக, துணை கலெக்டராக இவர் மாஸ் காட்டியதை இன்று வரையிலும் எந்த ரசிகரும் மறந்திருக்க மாட்டார். அந்த வகையில் சீரியலில் இருந்து சினிமாவிற்கு தாவிய நடிகர், நடிகைகளில் வாணி போஜனுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. இவர் சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் சிறப்பான என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் மீரா என்ற லீட் கேரக்டரில் நடித்திருந்தார் வாணி போஜன்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை: இந்தப் படத்திற்கு முன்னதாகவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்த வாணி போஜனுக்கு, தமிழ் சினிமா சிறப்பாகவே கைக்கொடுத்தது. அடுத்தடுத்த லாக் அப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் லவ் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் பரத்துடன் இணைந்து வாணி போஜன் நடித்திருந்தார். காதல் மற்றும் சந்தேகத்தையும் மையமாகக் கொண்டு திரில்லர் பாணியில் இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் நடிகை வாணி போஜன்.

வாணி போஜன் மூக்குத்தி: அந்த வகையில் அடுத்தடுத்த போட்டோ ஷூட் களை எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் மூலமும் இவருக்கு பட வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டி வருகின்றன. இந்நிலையில் தற்போது மிகவும் எளிமையான முறையில் மிகவும் அழகான போட்டோ சூட்டை எடுத்து முடித்துள்ளார் வாணி போஜன். இதில் அவர் அணிந்துள்ள மூக்குத்தி ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மூக்குத்தி அணிவதும் தற்போது பேஷனாகி உள்ள நிலையில் வாணி போஜனின் இந்த ட்ரெண்டியான மூக்குத்தி ஏராளமான ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.

சின்னத்திரை நயன்தாரா:வாணி போஜனை சிலர் சின்னத்திரை நயன்தாரா என்றே அழைப்பதுண்டு. இவர் நயன்தாராவை போலவே இருப்பதாக தொடர்ந்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள், இவரை இன்ஸ்டாகிராமில் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் வாணி போஜனை 2.4 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அஞ்சாமை படத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருந்தார். இந்தப்படம் இவருக்கு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X