குளுகுளு கண்ணாடி.. சும்மா ஸ்டைலான போஸ்.. வாணி போஜனின் கூல் பிக்ஸ் !
சென்னை : வாணி போஜனின் புது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அதில் நீல நிற கண்ணாடியை போட்டு சும்மா ஸ்டைலா போஸ் கொடுத்து இருக்கிறார் வாணி போஜன்.
சின்னத்திரையில் கலக்கி வந்த நாயகி வாணி போஜனுக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டமும் உண்டு. தற்போது இவர் வெள்ளித்திரையிலும் மின்னி வருகிறார். எப்போதும் போட்டோசூட் செய்து புகைப்படங்களை வெளியிடும் அவருக்கு ஏகப்பட்ட பேன்ஸ்.
Recommended Video
எப்போதும் சேலையிலே போட்டோசூட் செய்யும் வாணி போஜன், இந்த முறை சற்று இயல்பான ஆடையில் போட்டோசூட் செய்து இருக்கிறார் . நீல நிற கண்ணாடிப்போட்டு சும்மா அசத்தலான போஸ் கொடுத்து இருக்கிறார்.

இதில் வாணி போஜன் முகம் முழுக்க மஞ்சள் வெயில் நிறைந்திருக்க அவர் சிரிப்பது மிக அழகாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு த்ரிஷாக்கு மாற்று வாணி போஜன் என்று கூறியிருக்கிறார், இயக்குனர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த ரசிகர் கூறியிருந்தார் .
வாணி போஜன் சின்னத்திரைக்கு பிறகு சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார் இவருக்கு தெலுங்கில் தான் முதல் படம் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற படமான மீக்கு மாத்ரமே செப்தா என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் வாணி போஜன் .

வாணி போஜன் அடுத்ததாக தமிழில் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு முக்கிய வேடங்களில் நடிக்கும் லாக்கப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மேலும் அசோக் செல்வன் நாயகனாக நடித்து வரும் ஓ மை கடவுளே படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் வாணி போஜன் இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி வந்து செல்கிறாராம்.


Click it and Unblock the Notifications