Vani Bhojan: கடற்கரையில் சாவகாசமாக காற்று வாங்கும் நடிகை வாணி போஜன்!
சென்னை: சின்னத்திரை நயன்தாரா என்று பெயர் எடுத்த நடிகை வாணி போஜன், அரை டசனுக்கும் மேல் படத்தை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராமில்,கடற்கரையில் காற்று வாங்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ரசிகர்கள் கிறங்கிப்போய் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.
விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார். ஓ மை கடவுளே படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து சினிமாவில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். ஆனால் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த கதாபாத்திரமும் அமையவில்லை.

இதைத்தொடர்ந்து, ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. விக்ரமுடன் மகான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் வாணி போஜன் நடித்து இருந்தாலும் அவரது ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை. ஆனால், படக்குழு வெளியிட்ட டெலிட் சீனில் அந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அது இணையத்தில் டிரெண்டானது.

நடிகை வாணி போஜன்: இதையடுத்து, வாணி போஜன் தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்திருந்தார். திருட்டு விசிடி காலம் தொடங்கி, இன்றைய 'டொரன்ட்', 'டார்க் வெப்' வரை திரைப்படங்களைத் திருட்டு வீடியோவாக வெளியிட்டு வருமானம் பார்க்கும் கும்பலை, திரையுலகம் உட்பட எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாக இருந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் அதிரடி அரசியல், திரில்லர் ஜானரில் உருவான செங்களம் வெப் தொடரில் லீட் ரோல் நடித்திருந்தார்.

வெப் தொடர்களில்: இதில் கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ஆகியோர் நடித்திருந்தனர். ஓடிடியில் வெளியான செங்களம் இணையத் தொடரில் வாணி போஜன் அரசியல் கட்சியின் தலைவியாக புதிய அவதாரம் எடுத்திருந்தார். ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் கலையரசன், வாணி போஜன்,டேனியல், விஜி சந்திரசேகர் என பலரும் நடித்துள்ளனர். இத்தொடரில் சூர்யகலாவாக நடித்த வாணி போஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாணி போஜன்: ஒரு சில படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, கடற்கரையில் காற்று வாங்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











