தலைவிரி கோலத்துடன் தண்ணீரில் மிதந்த நடிகை..ஆனந்த கலக்கல் தான் போங்க!
சென்னை: நடிகை வாணி போஜன் தலைவிரி கோலத்துடன் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.
விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கினார்.

அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. விக்ரமுடன் மகான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் வாணி போஜன் நடித்து இருந்தாலும் அவரது ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை.
நடிகை வாணி போஜன்: இதையடுத்து, வாணி போஜன் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். திருட்டு விசிடி காலம் தொடங்கி, இன்றைய 'டொரன்ட்', 'டார்க் வெப்' வரை திரைப்படங்களைத் திருட்டு வீடியோவாக வெளியிட்டு வருமானம் பார்க்கும் கும்பலை, திரையுலகம் உட்பட எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாக இருந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் அதிரடி அரசியல், திரில்லர் ஜானரில் உருவான செங்களம் வெப் தொடரில் லீட் ரோல் நடித்திருந்தார். இதில் கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ஆகியோர் நடித்திருந்தனர். இத்தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

வித்தியாசமான கதை லவ்: காலித் ரகுமான் இயக்கத்தில் டாம் சாக்கோ நடிப்பில் மலையாளத்தில் வெளியான லவ் படத்தை, R. P. பாலா தமிழில் அதே பெயரில் இயக்கி உள்ளார். இதில், பரத், வாணி போஜன் ராதாரவி, விவேக் பிரசன்னா நடித்திருந்தனர். காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும்போது பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே சண்டை முற்றுகிறது. இந்த சண்டையில் கணவன் மனைவியை கொலை செய்து விடுகிறான். கொலையை மறைக்க முயல்கிறான் அதன் பின் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை. திரையரங்கில் வெளியான இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, அர்யான் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
சீரியல் நடிகையா வேண்டாம்: லவ் திரைப்படம் வெளியான போது பேட்டி அளித்த வாணி போஜன், பட வாய்ப்புக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டேன், பல ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல படவாய்ப்புகளும் கிடைத்தன ஆனால், பல நடிகர்கள் சீரியல் நடிகையா? வேண்டாம் என்று என்னை தூக்கி எறிந்தனர் என மனம் நொந்து பேட்டியில் பேசி இருந்தார்.

ஆனந்த கலக்கலில் வாணி போஜன்: ஒரு சில படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர் ஜாலியாக பொழுதை கழித்து வரும் தலைவிரி கோலத்துடன் வாட்டர் ரைட் செய்யும் போட்டோவை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.


Click it and Unblock the Notifications