Vani bhojan :பீச்சில் தாறுமாறாக போஸ் கொடுத்த வாணி போஜன்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
சென்னை : நடிகை வாணி போஜன், சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முக்கியமானவர்.
தமிழில் ஓ மை கடவுளே படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமான வாணி போஜன், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
மகான் படத்தில் விக்ரம் ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்த நிலையில், படத்தின் நீளம் காரணமாக அவரது காட்சிகள் நீக்கப்பட்டு, பின்பு யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்தோனேசியாவில் வாணி போஜன் :
நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து பெரியத் திரைக்கு தாவியவர்களில் மிகவும் முக்கியமானவர். பிரபல சேனலில் இவர் நடிப்பில் வெளியான தெய்வமகள் தொடர், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்த தொடரில் தாசில்தாராக, சத்யா என்ற கேரக்டரில் தன்னுடைய கணவன் பிரகாஷ் உள்பட அனைவரையும் அரவணைத்து செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார் வாணி போஜன். இந்தத் தொடர் இவரை பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

இந்தத் தொடரை தொடர்ந்து சில தொடர்களில் நடித்திருந்தார் வாணி போஜன். தொடர்ந்து தெலுங்கில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மீக்கு மாத்திரமே செப்தா என்ற படத்தின்மூலம் பெரியத் திரையில் அறிமுகமானார். தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தில் இவரது அறிமுகம் அமைந்தது. இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும் இவர் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், கேசினோ போன்ற படங்களிலும் இவர் கமிட்டாகி நடித்துள்ளார். ட்ரிப்பிள்ஸ், செங்களம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணைய தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்த மகான் படத்தின் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.
படத்தின் நீளம் காரணமாக அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அழகான புடவையுடன் ரசிகர்களை தாசில்தார் சத்யாவாக கவர்ந்த வாணி போஜன், தற்போது தன்னுடைய உடையில் தாராளம் காட்டி வருகிறார். தற்போது இந்தோனேசியாவில் சுற்றுலாவில் உள்ளார். குட்டி கவுனில், ட்ரவுசரில் அவர் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

மிகுந்த அடக்க ஒடுக்கமாக சீரியல்களிலும் படங்களிலும் நடித்துவந்த வாணி போஜன், தற்போது மிகுந்த கவர்ச்சி ரூட்டிற்கு மாறியுள்ளார். இவரது இந்த மாற்றம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. முன்னதாக ஸ்லீவ்லெஸ் கவுன்கள், பேக்லெஸ் கவுன்கள் என அதிரடியான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். தாசில்தாராக நடித்த சத்யாவா இது என்ற கேள்வியையே தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் அவரது இந்தப் மாற்றம் வரவேற்பையே பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











