சமந்தா மிகுந்த வலிமையானவங்க.. சொன்னது யாரு தெரியுமா.. அவங்களும் பிரபல நடிகைதான்!

சென்னை : விஜய் டிவியின் ஆஹா சீரியல் மூலம்தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் பிரபல நடிகை வாணி போஜன்.

Recommended Video

Vani Bhojan| Time management அப்படினா என்னன்னே எனக்கு தெரியாது | *Interview

தொடர்ந்து இவர் சன் டிவியில் நடித்த தெய்வ மகள் இவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே கொடுத்தது.

தற்போது சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு, சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை வாணி போஜன்

நடிகை வாணி போஜன்

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில்தான் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார். இவருக்கு சிறப்பான அறிமுகத்தை விஜய் டிவியின் ஆஹா தொடர் கொடுத்தது. தொடர்ந்து சன் டிவியில் இவர் நடித்த தெய்வ மகள் மிகப்பெரிய வெற்றியையும் ஏராளமான ரசிகர்களையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

தெய்வமகள் சத்யா கேரக்டர்

தெய்வமகள் சத்யா கேரக்டர்

முன்னதாக விமானப் பணிப்பெண்ணாக இருந்த வாணி போஜன், சினிமா மீது இருந்த விருப்பத்தால் மாடலிங்கில் ஈடுபட்டார். தொடர்ந்து சீரியல்களிலும் கவனம் செலுத்தினார். தெய்வமகளில் இவர் ஏற்று நடித்த சத்யா கேரக்டர் இப்போதும் ரசிகர்களின் பேவரிட்தான். தற்போது ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் இந்த தொடர், ரசிகர்களை தற்போதும் கவர்ந்து வருகிறது.

ஓ மை கடவுளே படம்

ஓ மை கடவுளே படம்

தற்போது படங்களில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்றுதான் இவர் ரசிகர்களிடம் பெயர் பெற்றிருக்கிறார். தமிழில் ஓ மை கடவுளே படத்தில் இவர் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில், அந்தப் படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது.

மகான் படத்தில் வாணி போஜன்

மகான் படத்தில் வாணி போஜன்

தொடர்ந்து ஜெய்யுடன் ட்ரிபிள்ல் வெப் தொடரில் நடித்திருந்தார் வாணி போஜன். இந்தத் தொடரும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர்

தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர்

இந்நிலையில் தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான இந்த தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையொட்டி வாணி போஜன் பிரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டார். அப்போது தனக்கு மிகவும் பிடித்த நடிகை சமந்தாதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா மிகவும் போல்டானவர்

சமந்தா மிகவும் போல்டானவர்

சமந்தா மிகவும் போல்டானவர் என்றும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்வகையில் அவருடைய செயல்பாடுகள் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரபல நடிகையாக உள்ள வாணி போஜன் தன்னுடைய சக நடிகை குறித்து இவ்வாறு கூறியுள்ளது சமந்தா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X