Vani bhojan: கல்யாண ஃபங்ஷன் போறீங்களா? புடவையில் அசத்தலாக இருக்கும் வாணி போஜன்!

சென்னை: நடிகை வாணி போஜன், இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து கொணடு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் அட்டகாசமாக புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் மலை போல குவிந்து வருகிறது.

சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் சென்ற நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை வாணி போஜன். ஊட்டியை சேர்ந்த இவர், கல்லூரி படிப்பை முடித்த பிறகு வாணி போஜன் ஏர் ஹோஸ்டஸாக கிங்பிஷர், இண்டிகோ போன்ற பிரபல நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.அதனை தொடர்ந்து அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங் துறைக்கு வந்த இவர்,சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் முதன்முதலாக நடித்தார். அந்த விளம்பரத்தை தொடர்ந்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.

vani bhojan instagram photos

வாணி போஜன்: இதைத்தொடர்ந்து வாணிபோஜன், ஓர் இரவு என்கிற ஹாரர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின், விஜய் டிவியில் ஆகா என்கிற சீரியலிலும் ஜெயா டிவியில் மாயா என்கிற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் இவர் நடித்த தெய்வமகள் சீரியல்தான் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்த சீரியலில்,சத்யா என்ற ரோலில் நடித்தார்.

vani bhojan instagram photos

அடுத்தடுத்த படத்தில்: அந்த சீரியலை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வாணி போஜன். அந்த கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மகான், மலேசியா முதல் அனிமேஷியா, மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, அஞ்சாமை என வருடத்திற்கு இரண்டு படத்தில் நடித்து வருகிறார் வாணி போஜன். எல்லா படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பது கிடைக்கவில்லை இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார் வாணி போஜன்.

vani bhojan instagram photos

செம க்யூட்: இந்நிலையில்,வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராமில் அழகான சில்க் புடவையில் க்யூட்டாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் நயன்தாரா போல இருக்கீங்க என்றும், செம க்யூட் என்றும் கல்யாண ஃபங்ஷன் போறீங்களா? என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
vani bhojan instagram photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X