கிசுகிசு எல்லாம் ஒரு மேட்டரா?… விட்டுத்தள்ளுங்க…மனம் திறந்த வாணி போஜன்!

சென்னை : நடிகை வாணி போஜன் கிசுகிசு எல்லாம் ஒரு மேட்டரா? விட்டுத்தள்ளிட்டு வேலையை பாருங்க என்று கூறியுள்ளார்.

விமான பணிப்பெண்ணாக இருந்த வாணிபோஜன் சின்னத்திரையில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்து தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் உள்ளார்.

பகைவனுக்கும் அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு என கிட்டத்தட்ட அரைடஜன் திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

வாணிபோஜன்

வாணிபோஜன்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தெய்வமகள் என்ற தொடர் மூலம் தமிழ் குடும்பங்கள் அனைவரின் மனதிலும் குறிப்பாக பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் வாணி போஜன். மாடலிங் துறையில் இருக்கும் போதே சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் , தனியார் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

படவாய்ப்புக்காக

படவாய்ப்புக்காக

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களின் வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் வாணி போஜன், இவர் தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரியான வாய்ப்புக்காகவும் கதைக்காகவும் காத்து இருந்தார்.

நல்ல பெயர்

நல்ல பெயர்

சீரியல்கள் முடிந்ததும் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாணி, மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது, படமும் ஹிட் ஆகி இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மகான் படத்தில்

மகான் படத்தில்

தமிழில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தில் வாணி போஜன் நடிக்கிறார். சீரியல்களில் நடிக்கும் போதே கதைகளை தேர்வு செய்யது நடித்த இவர், படங்களிலும் அதே பார்முலாவையே கடைப்பிடித்து வருகிறார். அண்மையில் வெளியான மகான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வாணி போஜன். ஆனால், படத்தின் நீளம் காரணமாக அவர் நடித்த காட்சி நீக்கப்பட்டது.

கிசுகிசு எல்லாம் ஒரு மேட்டரா?

கிசுகிசு எல்லாம் ஒரு மேட்டரா?

சமீபத்தில் பேட்டி அளித்துள்ள வாணி போஜன், நடிகையானால் கிசு கிசுவில் சிக்குவது என்பது சகஜம். முதல் முறை கிசு கிசுவில் என் பெயர் வந்த போது, நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், தற்போது வரும் கிசு கிசுக்களை ஒரு மேட்டராவே எடுத்துக்கொள்வதில், அதை அப்படியே தள்ளிவிட்டுவிட்டு என் வேலையை பார்க்கிறேன். கிசு கிசு வந்தால் ஜாலியா எஞ்சாய் பண்ணுங்க கஷ்டப்படாதீங்க என்று கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X