70 வயதில் மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் பழம் பெரும் நடிகை! சிவாஜி கணேசனின் ஹீரோயின்!
சென்னை: பழம் பெரும் நடிகையான வாணிஸ்ரீ மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்.
நடிகை வாணிஸ்ரீ 1960 மற்றும் 1970களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார் வாணிஸ்ரீ.
இவர் சிவாஜி கணேசனுடன் உயர்ந்த மனிதன், நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, மற்றும் நல்லதொரு குடும்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் ரிலீஸ்
அவர் நடித்த வசந்த மாளிகை படம் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது அந்த படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

தெலுங்கு சீரியல்
இந்நிலையில் அந்தப்படத்தில் நடித்த நடிகை வாணிஸ்ரீ மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். தற்போது தெலுங்கில் டிவி சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வாணிஸ்ரீ. இதில் பாட்டி கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

70 வயதில் மீண்டும் நடிப்பு
இதைத்தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கவுள்ளார் வாணிஸ்ரீ. திருமணத்திற்கு முன்பு சினிமாவில் இருந்து விலகியிருந்த வாணிஸ்ரீ தற்போது தனது 70 வயதில் மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.

நான் கருப்பு
குஷ்பு, சுஹாசினி உள்பட பலர் தன்னை மீண்டும் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறியுள்ள வாணிஸ்ரீ, தற்போது நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த கால நடிகைகளில் தான் மட்டும்தான் கருப்பாக இருந்ததாக கூறியுள்ள வாணஸ்ரீ கடவுள் தனக்கு நடிப்பையும், அழகையும் கொடுத்துள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications