சீரியல் நடிகர் சஞ்சீவுக்கும் வனிதாவுக்கும் உள்ள உறவு தெரியுமா? போட்டோவால் வெளி வந்த உண்மை!

சென்னை: நடிகை வனிதாவுக்கும் சீரியல் நடிகர் சஞ்சீவுக்கும் இடையில் உள்ள உறவு முறை வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில நாட்களாக மீண்டும் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அதற்கு காரணம் அவர் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் தான்.

வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை வனிதா காதல் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி, நான் சிங்கிள் மற்றும் இன்னமும் அவைலப்பிள் தான் என்று விளக்கமளித்தார்.

ஷேர் செய்யும் போட்டோஸ்

ஷேர் செய்யும் போட்டோஸ்

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க சின்னத்திரை மற்றும் தனது யூட்யூப் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார் வனிதா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

மேக்கப்பை பார்த்து கலாய்

மேக்கப்பை பார்த்து கலாய்

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கும் போட்டோக்கள், வெளியே செல்லும் போட்டோக்கள், வீட்டில் எடுக்கும் செல்பிக்கள் என பல போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். வனிதாவின் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் சில நேரங்களில் அவரது மேக்கப்பை பார்த்து கலாய்ப்பதும் உண்டு.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

அந்த வகையில் நடிகை வனிதா திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் பங்கேற்றனர். நடிகை சீத்தா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Recommended Video

BB Jodigal Shoot ஆரம்பிச்சாச்சு, விதிமுறைகளை மீறாமல் நடக்கும் Shooting | AnithaSampath,Ramyakrishnan
பிரபலங்களுடன் செல்பி

பிரபலங்களுடன் செல்பி

இதில் மஞ்சள் நிற பிளவுஸ் பிங்க் நிற சேலை என செம கலக்கலாக உள்ளார் நடிகை வனிதா. திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் அனைவருடனும் வளைத்து வளைத்து செல்பி எடுத்துள்ள வனிதா, அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

என்னுடைய பிரதர்

என்னுடைய பிரதர்

இதில் சீரியல் நடிகர் சஞ்சீவ் மற்றும் அவருடைய மனைவி பிரீத்தியுடன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, என்னுடைய பிரதர் மற்றும் சிஸ்டர் இன் லா என குறிப்பிட்டிருந்தார்.

அம்மாவின் சகோதரி மகன்

அம்மாவின் சகோதரி மகன்

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சஞ்சீவ் உங்க பிரதரா என கேட்டனர். அதற்கு மற்றொரு போட்டோவை ஷேர் செய்து விளக்கம் கொடுத்துள்ளார் வனிதா. அதாவது தனது அம்மா மஞ்சுளாவின் உடன் பிறந்த சகோதரி ஷியாமளாவின் மகன்தான் சஞ்சீவ்.. என்னுடைய ஃபேவரைட் பிரதர் என பதிவிட்டுள்ளார்.

சித்தி மகனா?

சித்தி மகனா?

வனிதாவின் விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், சித்தி மகன் என்று புரியும்படி சொல்லியிருக்கலாமே என கூறி வருகின்றனர். வனிதா திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X