ஹேண்ட்சம் அன்ட் ஹாட்.. அப்போதிலிருந்தே நான் உங்கள் ரசிகை.. பிரபல நடிகரின் போட்டோவை பகிர்ந்த வனிதா!

சென்னை: பிரபல நடிகரின் போட்டோவை பகிர்ந்துள்ள வனிதா விஜயகுமார் ஹேண்ட்சம் ஹாட் என புகழ்ந்துள்ளார்.

Recommended Video

ஜாதகப்படி சீக்கிரம் நடக்கலாம் | Powerstar Srinivasan fun speech | pickup drop movie |Filmibeat Tamil

நடிகை வனிதா விஜயக்குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமாகி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகள் தனது யூட்யூப் சேனல் என பிஸியாக இருந்தார் வனிதா.

தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது வனிதாவுக்கு. இதனால் சின்னத்திரை வெள்ளித்திரை என பிஸியாக உள்ளார் வனிதா.

பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப்

பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப்

அனல்காற்று, 2கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.

பவர் ஸ்டாருடன் போட்டோ ஷூட்

பவர் ஸ்டாருடன் போட்டோ ஷூட்

பிக்கப் ட்ராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் இணைந்து வனிதா விஜயகுமார் போட்டோ ஷூட் நடத்தினார். திருமண கோலத்தில் இருந்த போட்டோக்கள் வைரலானது. அதனை தொடர்ந்து மாடர்ன் டிரெஸில் பவர் ஸ்டாருடன் பைக்கில் ரெய்டு போவது போன்ற போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

வைரல் ஸ்டாராக அறிமுகமாகும் வனிதா

வைரல் ஸ்டாராக அறிமுகமாகும் வனிதா

இந்தப் படத்தின் மூலம் வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் அறிமுகமாகிறா வனிதா விஜயகுமார். மேலும் வசந்த பாலனின் படத்திலும் நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா, தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். மேலும் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

உங்களின் கம் பேக்கிற்காக காத்திருக்கிறேன்

உங்களின் கம் பேக்கிற்காக காத்திருக்கிறேன்

இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, ஹேண்ட்சம் அன்ட் ஹாட்.. அந்த நாட்களில் இருந்து எப்போதும் நான் உங்களின் ஒரு பெரிய ரசிகை... இன்னும் என்னால் காத்திருக்க முடியாது.. #அந்தகன் பேங் பேங் பேங்... டப்பிங் மற்றும் பிரமிப்பு.. நான் காத்திருக்கிறேன் பிரசாந்த்.. கம் பேக்கிற்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்.. ராக் ஆன் என பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இதேபோல் நடிகர் பிரசாந்தின் அப்பாவும் நடிகர் மற்றும் இயக்குநருமான தியாகராஜனுடன் எடுத்துள்ள போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா. இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஆயுஷ்மான் குரானா கதாப்பாத்திரத்தில் பிரசாந்த்

ஆயுஷ்மான் குரானா கதாப்பாத்திரத்தில் பிரசாந்த்

இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் அந்தகன் படம். பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தை அவரது அப்பா தியாகராஜன் இயக்கி வருகிறார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாப்பாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.

வெளிநாட்டில் க்ளைமேக்ஸ் காட்சி

வெளிநாட்டில் க்ளைமேக்ஸ் காட்சி

மேலும் இப்படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிகுமார், மனோபாலா வனிதா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் க்ளைமேக்ஸ் காட்சியை வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X