டிரெஸ் குறைஞ்சிடுச்சு.. முடியும் குறைஞ்சிடுச்சு.. வனிதாவின் புதிய அவதாரம்.. திணறடிக்கும் போட்டோஸ்!

சென்னை: நடிகை வனிதா ஹேர் கட் செய்து மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். திருமணங்கள், விவாகரத்து, காதல் என அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமாகி விட்டார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் சண்டை போட்டே மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் வனிதா.

யூட்யூப் சேனல் - திருமணம்

யூட்யூப் சேனல் - திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார். இதனை தொடர்ந்து சமையலுக்கான யூட்யூப் சேனலை ஆரம்பித்தார் வனிதா. அதில் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார்.

படங்களில் பிஸியான வனிதா

படங்களில் பிஸியான வனிதா

ஆனால் நான்கு மாதத்திலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் படங்களில் பிஸியாக உள்ளார். அனல்காற்று, 2கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.மேலும் வசந்த பாலனின் படத்திலும் நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பவர் ஸ்டாருக்கு ஜோடி வனிதா

பவர் ஸ்டாருக்கு ஜோடி வனிதா

பிக்கப் ட்ராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் இணைந்து வனிதா விஜயகுமார் போட்டோ ஷூட் நடத்தினார். திருமண கோலத்தில் இருந்த போட்டோக்கள் வைரலானது. அதனை தொடர்ந்து மாடர்ன் டிரெஸில் பவர் ஸ்டாருடன் பைக்கில் ரெய்டு போவது போன்ற போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

வைரல் ஸ்டாராக அறிமுகமாகும் வனிதா

வைரல் ஸ்டாராக அறிமுகமாகும் வனிதா

இந்தப் படத்தின் மூலம் வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் அறிமுகமாகிறார் வனிதா விஜயகுமார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா 4 கல்யாணம் இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன், அது என் இஷ்டம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

Recommended Video

ஜாதகப்படி சீக்கிரம் நடக்கலாம் | Powerstar Srinivasan fun speech | pickup drop movie |Filmibeat Tamil
ஹேர் கட் போட்டோவுக்கு நியூ மி

ஹேர் கட் போட்டோவுக்கு நியூ மி

படங்களில் பிஸியான பிறகு வனிதா படு மாடர்னாக மாறிவிட்டார். தொடை தெரிய குட்டி குட்டி கவுனை அணிந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் முடியையும் வெட்டியுள்ளார் வனிதா. வெள்ளை நிற ஃபிராக்கில் ஹேர் கட் செய்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள வனிதா, அந்த போட்டோவுக்கு நியூ மி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மாடர்ன் அவதார போட்டோஸ்

மாடர்ன் அவதார போட்டோஸ்

மேலும் தனது பிரண்ட்ஸுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார் வனிதா அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதிய ஹேர் கட், முட்டிக்கு மேல் மாடர்ன் டிரெஸ், கூலர்ஸ் என கலக்கலாய் உள்ளார் வனிதா. வனிதாவின் இந்த மாடர்ன் அவதார போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X