இது என்ன கண்ணுல கலரு.. ரெட்டை ஜடையில் வனிதா ஷேர் செய்த போட்டோ.. அதைக்கேட்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன இது கண்ணுல கலரு என கேட்டு மிரண்டு போயுள்ளனர்.
நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கடந்த ஆண்டு பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
ஆனால் அடுத்த 4 மாதத்திலேயே அவரை பிரிந்தார் வனிதா. பீட்டர் பால் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறி அவரை விரட்டினார்.

நான்காவது திருமணம்
இதுபோன்று கடந்த ஆண்டு முழுவதும் பீட்டர் பாலுடன் திருமணம், ரொமான்ஸ், ஹனிமூன், சண்டை, பிரிவு என அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

சமரசமே இல்லை
இதனை வனிதா மறுத்துள்ள போதும் நெட்டிசன்கள் அதுதொடர்பான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர். என்ன பிரச்சனை என்றாலும் தனது வேலையில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்வதில்லை வனிதா.

சோஷியல் மீடியா
சினிமாவில் 4, 5 படங்கள் என பிஸியாக இருந்த போதும் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் வனிதா. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்ன இது என பதறி போயுள்ளனர்.
Recommended Video

நீல நிற ஐ லைனர்
அதாவது அந்த போட்டோவில் ரெட்டை ஜடை பாவடை சட்டை அணிந்துள்ள வனிதா கண்களுக்கு நீல நிற ஐலைனர் போட்டுள்ளார். பார்க்கும் போதே பளீச்சென டெரர் லுக்கில் உள்ளது வனிதாவின் கண்கள்.

உங்க ஜோடி யாரு?
அதற்கு மேட்சாக நீல நிற பொட்டு, கழுத்து நிறைய நகை என படு பயங்கரமாக உள்ளார் வனிதா. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன இது கண்ணுல கலர் என கமெண்ட் அடித்துள்ளனர். இன்னும் சிலர் பிக்பாஸில் யார் உங்கள் ஜோடி என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











