நீங்க இல்லன்னா... அக்கா இல்ல... பிறந்த நாளில் வாழ்த்து கூறிய விஜய் டிவிக்கு வனிதா நன்றி!
சென்னை: தனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய விஜய் டிவிக்கு நடிகை வனிதா விஜயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் வனிதா விஜயகுமார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் வனிதா விஜயகுமார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட்டாக வில்லை.

பிக்பாஸ் சீசன் 3
இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய நடிகை வனிதா, திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதனை தொடர்ந்து மீண்டும் பிரபலமானார் நடிகை வனிதா.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதனால் படிப்படியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது வனிதாவுக்கு. தொடர்ந்து அனல் காற்று, 2கே அழகானது காதல், அந்தாகன், சிவப்பு மனிதன், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், பிக்கப் ட்ராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video

விஜய் டிவி வாழ்த்து
இந்நிலையில் வனிதா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வனிதாவுக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியும் இரவு 12 மணிக்கு வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தது.

நீங்கள் இல்லைன்னா அக்கா இல்ல
இதனை பார்த்த வனிதா விஜய் டிவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், நன்றி... நீங்கள் இல்லையென்றால் வனிதா அக்கா இல்லை... மிக்க நன்றி.. விஜய் டிவியில் உள்ள அனைவருக்கும் என அன்பு என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











