Vanitha: கன்றாவியா இருக்கு.. வனிதாக்கு என்ன ஆச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். அந்த படத்தின் தோல்விக்கு பிறகு பிறகு நடிகை வனிதாவை அதிக அளவில் சோசியல் மீடியா பக்கம் பார்க்க முடிகிறது. தற்போது வனிதா பதிவிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன இது கோலம் என கிண்டலடித்து வருகின்றனர்.

மூத்த நடிகர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தின் மூலமாக விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் சில படங்களில் நடித்த வனிதா, சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமண வாழ்க்கையில் பிரச்சனை மகள்களுடன் தனியாக வசித்துவந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று நன்றாக சமைத்து பெயர் எடுத்தார்.

vanitha Vijayakumar photos
Photo Credit:

நடிகை வனிதா: இதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமாருக்கு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. இதையடுத்து, வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்த 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தை வனிதாவே இயக்கி இருந்தார். இந்த படத்தில் வனிதா, ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். தியேட்டரில் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதெல்லாம் ஒரு படமா எனபடத்தை பார்த்தவர்கள் திட்டினார்கள்.இதோடு மட்டுமில்லாமல் இளையராஜா இசையமைத்த 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற பாடலை படத்தில் பயன்படுத்தி இருந்தார். இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திவிட்டதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இப்படி பல பிரச்சகைகள் வந்த போதும், எது பற்றியும் கவலைப்படாமல் படத்தை தனது சொந்த யூடியூப் சேனலில் வெளியிட்ட போட்ட காசை எடுத்துவிட்டார்.

என்ன ஆச்சு வனிதா: தற்போது, அம்மணிக்கு பெரிதாக எந்த படவாய்ப்பும் இல்லாததால், மீண்டும் யூடியூபில் சமையல் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அதோ மட்டுமில்லாமல் விதவிதமான போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், தலையில் கிரீடத்தையும் கையில் வாளுடன் 'கண்ணே கனியே உன்னோடு சரணாகிறேன்' என்ற பாடலுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வனிதாவிற்கு என்ன ஆச்சு என்றும், இது கோலம் இது என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X