என்ன ஆச்சு வனிதாவுக்கு.. இப்படி இளச்சி போயிட்டீங்க.. நலம் விசாரிக்கும் ரசிகர்கள் !
சென்னை : சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வனிதா, தினமும் ஒரு புகைப்படத்தை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தாய்லாந்துக்கு சுற்றுலாச் சென்றுள்ள வனிதா, தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.
இந்த படத்திற்கு ஏராளமான லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

மூத்த மகள்
பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

புகழ் பெற்றார்
தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

யூடியூப் சேனல்
வனிதா விஜயகுமார், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பல்வேறு திரைப்படத்திலும் பிஸியாக நடித்தி வரும் வனிதா, சமீபத்தில் பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் , பாதியில் ஷோவிலிருந்து வெளியேறினார்.

ஒல்லியான வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் உடல் எடை இளைத்து மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்னாச்சு ஏன் இவ்வளவு டல்லாக இருக்கிறார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











