Vanitha Vijayakumar: திருமணம் குறித்து திட்டிய மகள்கள்.. வனிதா விஜயகுமார் ஆதங்கம்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் போல்டாக தன்னுடைய கருத்துக்களை கூறுவதன்மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார். வனிதா என்றால் அடாவடிதான் என்று பெயர் பெற்றுள்ள இவர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டில் ஆன இவருக்கு அடுத்தடுத்த திருமணங்கள் சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில் தற்போது தன்னுடைய மகள்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அடுத்தடுத்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலமும் இவரது ரசிகர்கள் வட்டம் அதிகரித்த நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

vanitha vijayakumar tamil cinema

நடிகை வனிதா விஜயகுமார்: நடிகை வனிதா விஜயகுமார், விஜயகுமார் -மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளாக உள்ள நிலையில், தன்னுடைய குடும்பத்தினருடன் எந்த ஒட்டுதலும் இல்லாமல்தான் உள்ளார். சென்னையில் தன்னுடைய மகள்களுடன் தற்போது வசித்துவரும் வனிதா விஜயகுமார், தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் உடன் பிறந்தவர்கள் குறித்து அவ்வப்போது தன்னுடைய வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து வருகிறார். தான் நினைக்கும் விஷயங்களை போல்டாக கூறுவதில் பெயர்பெற்ற வனிதா விஜயகுமார் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டவர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

வனிதா ரீ-என்ட்ரி: ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாத நிலையில் அடுத்தடுத்த மூன்று திருமணங்களை செய்துள்ளார் வனிதா விஜயகுமார். இதனிடையே இவரது ரீ என்ட்ரிக்கான அடித்தளமாக விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் அமைந்தன. தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர், இடையிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

மூன்று திருமணங்கள்: முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த வனிதாவிற்கு ஒரு மகன் உள்ள நிலையில், அடுத்தடுத்து ராஜன் மற்றும் பீட்டர் பால் என்பவர்களையும் திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். இடையில் சில காலம் நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, சமீபத்தில் ராபர்ட்டுடன் இணைந்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இவர் அடுத்த கல்யாணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதனிடையே தன்னுடைய மகள்கள் தன்னுடைய திருமணம் குறித்து தன்னிடம் கேட்ட விஷயத்தை தற்போது வனிதா விஜயகுமார் வெளிப்படுத்தியுள்ளார்.

வனிதாவை திட்டிய மகள்கள்: ஆண்களும் ஆண்களும் திருமணம் செய்கிறார்கள். அதேபோல பெண்களும் பெண்களும் திருமணம் செய்கிறார்கள். இவர்களது திருமணம் சிறப்பாக அமைவதாக தன்னுடைய பெண்கள் சுட்டிக் காட்டி தன்னை திட்டுவதாகவும், தான் ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாதா என்று கேள்வி எழுப்புவதாகவும் வனிதா விஜயகுமார் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இவரது மகள் ஜோவிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்றநிலையில் அடுத்ததாக வனிதா விஜயகுமார் மற்றும் மாஸ்டர் ராபர்ட் இணையவுள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தை இவர் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X