Vanitha: திடீரென கழண்ட மேலாடை.. கண்டுக்காம போன வனிதா.. கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: வைரல் ஸ்டார் என்ற பெயரோடு கெத்தாக வலம் வந்து கொண்டு இருக்கும் வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், பட நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த போது, அவரின் மேலாடை திடீரென கழண்டு விழுந்துள்ளது. அதை கண்டு கொள்ளாமல் கூலாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் வனிதா.
விஜயகுமார், மஞ்சுளாவின் மகளான வனிதா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் என்று சொல்லலாம், எந்த கருத்தாக இருந்தாலும், அதை துணிந்து சொல்வது மட்டுமில்லாமல் அதை செய்தும் காட்டிவிடுவார் வனிதா. இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமான போது, உலகமே தெரியாத அப்பாவி பெண்ணாகத்தான் இருந்தார். கலா மாஸ்டர் சிங்கப்பூரில் நடத்திய நிகழ்ச்சியில் வனிதாவிற்கு திருமணம் ஆகப்போகிறது என்றும், அவரின் வருங்கால கணவர் யார் என்று அவரிடமே கேட்போம் என்று பேசி இருப்பார். அந்த நிகழ்ச்சியில் வனிதா பேசுவதற்கே அவ்வளவு வெட்கப்பட்டு கடைசியில் வருங்கால கணவரின் பெயரே சொல்லாமல் ஓடிவிட்டார். அப்படி பேசுவதற்கே வெட்கப்பட்ட வனிதா, இப்போது, நான் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்வேன் என்று பேசுவதை கேட்கும் போது, ஆச்சரியமாகத்தான் உள்ளது. அதற்கு காரணம் அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளாகக்கூட இருக்கலாம், அவை அனைத்தும் வனிதாவை ஒரு தைரியமான பெண்ணாக மாற்றி இருக்கிறது.

வனிதா விஜயகுமார்: சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை வனிதா, மாணிக்கம், தேவி போன்ற படத்தில் நடித்து வந்த நிலையில், நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து வனிதாவிற்கு 19வது வயதிலேயே ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் பிறந்தார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பின் இரண்டாவதாக ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். வனிதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி, அப்பா ஆகாஷ் உடன் வசித்து வருகிறார். அதுபோல வனிதாவின் இரண்டு மகள்களில் ஜோவிகா மட்டும்தான் வனிதாவுடன் இருக்கிறார்.

கழண்ட மேலாடை: திருமணம், விவாகரத்து என பல சர்ச்சையில் சிக்கிய வனிதா, சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பட்ட கஷ்டத்தை வனிதா கண்ணீர் விட்டு பேசி இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வனிதா, அநீதி, ஹரா, தில்லு இருந்தா போராடு, அந்தகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். படத்தில் பிஸியாக நடித்து வரும் வனிதா, இசைவெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு என எதுவாக இருந்தாலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு நிகழ்ச்சிக்கு நவநாகரீக உடையில் வந்திருந்தார். அப்போது, மேலாடை திடீரென கழண்டு விழுந்துள்ளது. இது சங்கடமாக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், அப்படியே போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் வனிதா, இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மணிக்கு கெத்து தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











