க்யூட் க்யூட் ரியாக்ஷனில் அசத்துறீங்களே வரோ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
சென்னை : வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடித்து இருப்பார். முதல் படத்திலேயே நடனம், குழந்தைக்கு அம்மா கதாபாத்திரம் என துணிச்சலாக செய்து இருப்பார்.
இவர் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நற்பெயர் பெற்றார்
நடிகை வரலட்சுமி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டடை திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து நிபுணன், அம்மாயி, விக்ரம் வேதா, சத்யா ஆகிய படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன.

லீட் ரோலில்
விஜயின் சர்க்கார், விஷாலின் சண்டைக்கோழி2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிப்பதை விட இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

பிஸியாக
தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில்இவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சமீபத்தில் வெளியான க்ராக், நாந்தி போன்ற படங்களில் இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. தற்போது இவர் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் இவர் நடித்து வருகிறார்.

க்யூட் ரியாக்ஷன்
இந்நிலையில், உறவுக்காரர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்ட இவர் அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், க்யூட் க்யூட் ரியாக்ஷனில் அசத்தியுள்ளார். மேலும், நீ என்னை அழகாக ஆக்கிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார். வாத்தி கமிங் பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











