வரலட்சுமி ஒரு ஆம்பள.. தைரியம் இருந்தா நேர்ல பேசு.. வெளுத்து வாங்கிய நடிகை!

சென்னை: சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வருங்கால கணவர் பற்றித்தான் பேச்சாக உள்ளது. நிக்கோலாய் சச்தேவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக, தகவல் வெளியானது. இதுகுறித்து வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன், வரலட்சுமி குறித்து பல விஷயத்தை பேசி இருந்தார். இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வதும் தெரியவந்துள்ளது.

Actress Varalakshmi sarathkumar slams netizens bad comment

ஆம்பள மாதிரி: இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக்கூடியவர். இவரது குணம் தான் வரலட்சுமிக்கும், ஆம்பள மாதிரி இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமிக்கு வீட்டுக்கு வருவார். யாராவது சேட்டை செய்தால், அடித்து விடுவார் தைரியமான பெண். ஐந்து வருஷத்திற்கு முன்பே நடிகர் விஷாலுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் போடா போடி படத்தில் நடித்த போது சிம்புவுடன் உறவில் இருந்ததாக அப்போது பேசப்பட்டது என்றார்.

பெரிய தொழிலதிபர்: மேலும், வரலட்சுமியின் வருங்கால கணவர் மும்பையில் பெரிய தொழில் அதிபர் ஆர்ட் கேலரி வைத்து இருக்கிறார். இவருக்கு கலிபோர்னியா நாட்டு உலக அழகி கவிதாவுடன் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்தாகிவிட்டது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்று வழக்கம் போல பல விஷயத்தை மிகைப்படுத்தி பேசி இருந்தார். இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ் வரலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துகொண்டால் உங்களுக்கு என்ன என்று கேட்டு வருகின்றனர்.

Actress Varalakshmi sarathkumar slams netizens bad comment

விளாசிய வரலட்சுமி: மேலும், வரலட்சுமி அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை ஷேர் செய்துள்ளார். அதில் வரலட்சுமி, நெகட்டிவாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் நபர்களை பார்த்து நான் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய அம்மாவையோ, தங்கையையோ அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களையோ இப்படி பேசுவீங்களா? உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து விட்டு விடுங்கள். நீங்கள் அவரை அன்ஃபாலோ செய்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாமே? எதற்காக அவரை பாலோ செய்து, அவரை கமெண்டில் மோசமாக ஏன் திட்டவேண்டும்.

நேரில் வந்து பேசுங்க: ஒருவரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் இல்லையென்றால். அப்படியே விட்டு சென்று விடுங்கள். அது உங்கள் விருப்பம். முகம் தெரியாது என்பதால் மறைந்து இருந்து கமெண்ட் அடிப்பது சரியா? தைரியம் இருந்தா நேரில் வந்து பேசுங்க என்று பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X