சிம்புவுடன்அறிமுகமாகும் போடா போடி- எதிர்பார்ப்பில் வரலட்சுமி

By Sudha

Varalakshmi and Simbu
சிம்புவுடன் நடித்து அறிமுகமாகவுள்ள போடா போடி படத்தின் ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதால் படபடப்பான எதிர்பார்ப்பில் உள்ளார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.

சரத்குமாரின் முதல் மனைவியின் மூலம் பிறந்தவர் வரலட்சுமி. இவரும் இப்போது நடிகையாகியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்ப்ட்டது,. ஆனாலும் தொடங்கப்படாமல் இழுத்துக் கொண்டிருந்தது.

தற்போது அனைத்தும் முடிவாகி ஷூட்டிங்குக்கு கிளம்பவுள்ளனர். ஜூன் முதல்வாரத்தில் முதல் ஷெட்யூல் தொடங்குகிறதாம். லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெறுகிறதாம்.

இதுகுறித்து வரலட்சுமி கூறுகையில், ஜூன் முதல் வாரம் லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பில் என்னை யாரும் கலாட்டா செய்யக் கூடாது என்று படபடப்போடு இருக்கிறேன்.

இப்படம் குறித்து அறிவித்து ஒரு வருடமாகி விட்டது. பல விஷயங்கள் முடிவாகாமல் இருந்ததே இதற்குக் காரணம். இருப்பினும் நான் இதற்காக காத்திருக்காமல் எனது இசை சம்பந்தமான வேலைகளில் பிசியாகவே இருந்தேன்.

மம்மா மியா நிகழ்ச்சிக்க்காக நாடு முழுவதும் டூர் போய் வந்தேன். இப்போது படப்பிடிப்புக்குக் கிளம்ப வேண்டும். நாங்களும் படப்பிடிப்புக்குத் தயார். ஒரு கலக்கு கலக்க தயாராகவே இருக்கிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு துறுதுறுப்பான பெண் கேரக்டர். நிறைய பாடல்கள் உள்ளனவாம். டான்ஸுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. காமெடிக்குப் பஞ்சமே இல்லை. காதல், கவர்ச்சிக் காட்சிகளும் நிறையவே இருக்கும்.

சிம்பு நல்ல நடனக்காரர் என்பதால், அவருக்கேற்ற நாயகியை தேடி வந்தனர். எனக்கு டான்ஸ் நன்கு வரும் என்பதால் என்னைத் தேர்வு செய்தார் இயக்குநர் விக்னேஷ் சிவா என்றார் வரலட்சுமி.

சரி, சிம்புவுக்கு. சல்சா நடனப் பயிற்சி அளித்தீர்களாமே என்று கேட்டபோது, அய்யா, அப்படியெல்லாம் இல்லை. நானும், சிம்புவும் சேர்ந்து பிராக்டிஸ் செய்தோம் அவ்வளவுதான். சல்சா என்பது வித்தியாசமான ஒரு நடனம். சிம்பு அதை உடனடியாக கிரகித்துக் கொண்டார் என்றார் வரலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X