திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி போட்ட முதல் போஸ்ட்.. கணவரை என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

சென்னை: சரத்குமாரின் மூத்த மகளான, வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய 38 வயதில் 14 வருட நண்பரான நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், முதன் முறையாக வரலட்சுமி தனது திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

போடா போடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகை வரலட்சுமி, தற்போது தமிழ்,தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் நட்பாக மாறி, காதலாக மாறியதைத் தொடர்ந்து, காதலை வீட்டில் சொல்லியதை அடுத்து சரத்குமார் இவரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார்.

varalaxmi nicholai sachdev wedding

காதல் திருமணம்: இதையடுத்து கடந்த மார்ச் மாதம் மும்பையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த வாரம் சென்னையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் ஹல்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தது. சங்கீத் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் என பலர் மண மக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

திருமண போட்டோ: இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கடற்கரையோரம் பந்தல் போட்டு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தில் பட்டு வேட்டி, சட்டையில் ஜம்முனு இருந்தார் நிக்கோலய். சிவப்பு நிற பட்டுப்புடவையில் தலையில் மல்லிப்பூ வைத்து அம்சமாக இருந்தார் நடிகை வரலட்சுமி இந்த திருமண போட்டோவை ராதிகாவின் மகள் ரயன் மித்ரன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

முதல் பதிவு: இந்நிலையில், நடிகை வரலட்சுமி, திருமணத்திற்கு பின், முதன் முதலாக தனது திருமண போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும், அதில் கடைசியாக எனக்கு திருமணம் நடந்தது…என் இளவரசன் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்… நானும் திருமணம் செய்து கொண்டேன். என் அன்பு, என் செல்லம், என் காதல், மகிழ்ச்சி எல்லாம் நீ… ஐ லவ் யூ நிக்கோலாய் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X