வளைந்து, நெளிந்து யோகா செய்யும் சிம்பு பட நடிகை.. இத நாங்க எதிர்பாக்கவே இல்ல!

சென்னை : யோகா செய்யும் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் சிம்பு பட நடிகை. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார். அந்தப் படத்துக்குப் பிறகு மதகஜராஜா, விக்ரம் வேதா,வெல்வெட் நகரம், நிபுணன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இயக்குனர் பாலா எழுதி இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வித்தியாசமான கதையில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் சசிகுமார் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்தவகையில் டேனி, வெல்வெட் நகரம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்காத நிலையில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை வரலட்சுமி. அதுமட்டும் இல்லாமல், தனுஷ் டோவினோ தாமஸ், சாய்பல்லவி நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல படங்கள்

பல படங்கள்

தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் காட்டேரி, பாம்பன், யானை, யசோதா, பிறந்தாள் பராசக்தி போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. யசோதா படத்தில் சமந்தா மற்றும் உன்னி முகுந்தன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமிக்கு மட்டும் இல்லாமல் யசோதா திரைப்படம் சமந்தாவுக்கும் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யோகா டைம்

யோகா டைம்

பல படங்களில் கமிட்டாகி படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் இந்த சூழலிலும், நடிகை வரலட்சுமி சரத்குமார் வீட்டில் தனது அன்றாட வேலையான யோகாவையும் தொடர்ந்து செய்து வருகிறார். யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரரான நடிகை வரலட்சுமி, யோகா செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தரத்தில் தொங்கியபடி இவர் செய்யும் யோகாக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X