Varalaxmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்!
சென்னை: பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா இவர்களின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் அவர் வில்லி கேரக்டரில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் இவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக பழகி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்நிலையில் நேற்றைய தினம் சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இவரது திருமணம் குறித்து அறிவிப்பை குடும்பத்தினர் வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வரலட்சுமி சரத்குமார்: பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா இவர்களுக்கு பிறந்தவர் வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார். இந்நிலையில் விஜய், விஷால் உள்ளிட்டவர்களுக்கு வில்லியாக சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹனுமான் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது.
ராயன் படத்தில் வரலட்சுமி: இதனிடையே அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளநிலையில் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாரின் கேரக்டர் போஸ்டரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இவரது திருமணம் குறித்து அடுத்தடுத்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். முன்னதாக நடிகர் சிம்பு மற்றும் விஷால் ஆகியோருடன் வரலட்சுமியை இணைத்து பல தகவல்கள் வெளியாகின.
வரலட்சுமி -நிக்கோலாய் நிச்சயதார்த்தம்: இந்நிலையில் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை மணக்க உள்ளார் வரலட்சுமி சரத்குமார். இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்றைய தினம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் சூழ நடந்து முடிந்துள்ளது. நிக்கோலாயுடன் வரலட்சுமி சரத்குமார் கடந்த 14 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும் தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களது நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கலர்ஃபுல் புகைப்படங்கள்: நீண்ட தலைமுடியுடன் சச்தேவ் இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார். இவர் மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்களது நிச்சயத்தை செய்து கொண்டுள்ளனர். விரைவில் இவர்களது திருமணம் குறித்து அறிவிப்பை குடும்பத்தினர் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தங்களது குலதெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்தில் சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வரலட்சுமியின் நிச்சயதார்த்த கலர்புல் புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications











