வருங்கால கணவருடன் அல்லு அர்ஜுனுக்கு திருமண அழைப்பிதழ்.. உற்சாக கொண்டாட்டத்தில் வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அடுத்த மாதம் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக சென்னையில் திருமணத்தை ஒட்டி மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திருமணத்தையொட்டி, தன்னுடைய அப்பா சரத்குமார், நிக்கோலய் சச்தேவ் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் துபாயில் வரலட்சுமி ஷாப்பிங் செய்துள்ளார்.
வரலட்சுமி தன்னுடைய திருமணத்தையொட்டி, முன்னணி நடிகர்களுக்கு தன்னுடைய அப்பா சரத்குமார் மற்றும் ராதிகா உள்ளிட்டவர்களுடன் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்ததை அடுத்தடுத்து பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுக்கு நிக்கோலய்யுடன் இணைந்து சென்று வரலட்சுமி திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் அடுத்த மாதம் 2ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தாய்லாந்தில் இந்த திருமணம் நடக்கவுள்ள நிலையில் முன்னதாக சென்னையில் ஹல்தி , மெஹந்தி உள்ளிட்ட நிகழ்வுகளும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணத்தையொட்டி அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களுக்கு வரலட்சுமி அவரது அப்பா மற்றும் ராதிகாவுடன் இணைந்து அடுத்தடுத்து திருமண பத்திரிகைகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் பிரபல தெலுங்குப்பட நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

அல்லு அர்ஜுனுக்கு அழைப்பிதழ்: இந்த சந்திப்பின்போது தன்னுடைய வருங்கால கணவர் நிக்கோலய் சச்தேவையும் அவர் உடன் அழைத்து சென்றுள்ளார். இந்த நிகழ்வின் அழகிய தருணங்களை அவர் புகைப்படமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மும்பையின் பிரபல தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவை கடந்த 14 ஆண்டுகளாக வரலட்சுமி சரத்குமார் காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடனும் தன்னுடைய வருங்கால கனவுருடனும் இணைந்து வரலட்சுமி சரத்குமார் ஷாப்பிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
வெளிநாட்டில் ஷாப்பிங்: தன்னுடைய அப்பா சரத்குமார், நிக்கோலய் சச்தேவ் மற்றும் அவரது டீன்ஏஜ் மகள் ஆகியோருடன் தன்னுடைய திருமண ஷாப்பிங்கை வரலட்சுமி துபாயில் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. 38 வயதாகும் வரலட்சுமி சரத்குமார், இத்தனை ஆண்டுகளாக தன்னுடைய திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த நிலையில் தற்போது நிக்கோலய்யை திருமணம் செய்யவுள்ளார். முன்னதாக சென்னையில் நடைபெறவுள்ள ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகளில் திரைப்பிரபலங்கள் பலரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
படங்களில் நடிப்பாரா?: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து அதிரடி நடிகையாக வலம் வந்தார் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷின் ராயன் படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. திருமணத்தை தொடர்ந்து வரலட்சுமி தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











