சிக்கென்ற புகைப்படங்களை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.. இவங்களுக்கு மட்டும் வயசு ரிவர்ஸ்ல போகுதே!

சென்னை : கடந்த 2012ம் ஆண்டில் வெளியான போடா போடி படத்தின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தில் கொழுகொழுவென சிம்புவிற்கு அக்கா போல காணப்பட்ட வரலட்சுமியின் லுக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

ஆனாலும் தொடர்ந்து போல்டான கேரக்டர்களில் நடித்து இவர் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார், சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவர் கடந்த 2012ம் ஆண்டில் சிம்பு -விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான போடா போடி என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் மிகவும் குண்டாக காணப்பட்டார் வரலட்சுமி. படத்தில் சிம்புவிற்கு அக்கா போல அவர் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

பவர்புல் கேரக்டர்கள்

பவர்புல் கேரக்டர்கள்

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் இவரை காண முடிந்தது. விஜய்யின் சர்க்கார் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த பவர்புல்லான கேரக்டர் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது. தொடர்ந்து போல்டான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இத்தகைய கேரக்டர்கள் இவருக்கு சிறப்பாக அமைகின்றன.

ஸ்லிம்மான வரலட்சுமி

ஸ்லிம்மான வரலட்சுமி

இந்நிலையில் மிகவும் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். தற்போது 37 வயதாகும் இவர் தொடர்ந்து ஒல்லியான தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.

புதிய போட்டோஷுட்

புதிய போட்டோஷுட்

தற்போது அழகான டாப் மற்றும் ட்ரவுசரில் சிறப்பான லுக்கில் இவர் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை மாற்றத்திற்கான புகைப்படங்களாக இவர் வெளியிட்டுள்ளார். தன்னால் முடியுமென்றால் அனைவராலும் முடியும் என்றும் ஊக்கமளித்துள்ளார்.

அரை டஜன் படங்கள்

அரை டஜன் படங்கள்

தற்போது தமிழில் பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யசோதா சபரி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தவிர தெலுங்கிலும் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X