Varalaxmi Sarathkumar: ஆத்தாடி கில்லர் மோடில் வரலட்சுமி சரத்குமார்.. மொரட்டு ஒர்க் அவுட்டா இருக்கே!
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. இந்த கதாபாத்திரத்தில் அந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்று முயற்சி செய்தோம், ஆனால் தேதிகள் இல்லாததால் வேறு நடிகையை நாடினோம் என திரையுலகில் பலருக்கும் நடைபெற்றுள்ளது. ஆனால் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கதாபாத்திரத்தை அவரைத் தவிர மற்றவர்கள் கையாள்வது என்பது வழக்கத்தை விட கூடுதல் சவாலானது. காரணம் இவரது நடிப்பில் இருக்கும் தனித்தன்மை.
குணச்சித்திர கதாபாத்திரங்களை இவர் கையாளும் விதம் ரசனைக்குரியது என்றால், வில்லனிசமான கதாபாத்திரங்களில் இவர் 100க்கு 90 மதிப்பெண்கள் வாங்கும் நடிகை. வரலட்சுமி சரத்குமார் நடிகை மட்டும் இல்லாமல், உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். முறையாக நடனம் கற்றவரும் கூட. இப்படி இருக்கையில் இவர் விரைவில் படம் ஒன்றையும் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

ஒர்க் அவுட் வீடியோ: இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஜிம் ஒர்க்-அவுட் வீடியோவப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஜிம்மில் மிகவும் தீவிரமாக ஒர்க் அவுட் செய்கிறார். பொதுவகாவே வரலட்சுமி சரத்குமார் அவரது உடல் எடையில் அதிக அக்கறை கொண்டவர். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் உடல் எடையை அதிகரிக்கவும் தயங்கியது இல்லை. இப்படி இருக்கையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோவைப் பகிர்ந்து, கில்லர் ஒர்க் அவுட் என்று கேப்ஷன் இட்டுள்ளார்.
ஜொள்ளு விடும் ரசிகர்கள்: இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில ரசிகர்களோ ஜொள்ளு விட்டுக் கொண்டும் ஃபயர் விட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ரசிகர் ஒருவர் உங்களுக்கு 40 வயது ஆனாலும் 18 வயது பெண் போல இருக்குறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ, " அக்கா நீங்க குண்டா இருந்தாதான் அழகா இருக்கும், ஒல்லியானா சத்தியமா நல்லா இல்லை அக்கா என்று கமெண்ட் போட்டுள்ளார். மேலும் தனது காலை இப்படித்தான் எல்லா நாட்களும் தொடங்குகிறது என்று வரலட்சுமி சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











