அந்த கெத்து.. ஜெயலலிதா மேம் எனக்கு இன்ஸ்பிரேஷன்.. கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்.. வரலட்சுமி பேட்டி!
சென்னை: விஷால், வரலட்சுமி, அஞ்சலி,சந்தானம் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 12 பிறகு வெளியான இந்த திரைப்படத்தில் சந்தானம் காமெடியில் கலக்கியதால்,படத்தை பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இப்படம் முதல் நாளிலேயே 3.2 கோடி வசூலை அள்ளி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படத்தில் இந்த படம் தான் பெஸ்ட் என ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக மத கஜ ராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலட்சுமி, 12 வருடத்திற்கு முன் மத கஜ ராஜா திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பத்து வருடத்தில் சினிமா எவ்வளவோ மாறி இருக்கிறது. ஆனால், படம் பார்க்கும் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். அதற்கு காரணம் இந்த திரைப்படத்தில், வயிறு வலிக்கும் அளவிற்கு காமெடிகள் இருக்கிறது. போடா போடி திரைப்படத்திற்கு பிறகு நான் அடித்த இரண்டாவது திரைப்படம் தான் மத கஜ ராஜா.

முட்டாள்கள்: சோசியல் மீடியாவில் பரவும் நெகட்டிவ் கமெண்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த வரலட்சுமி, சோசியல் மீடியாவில் தேவையில்லாமல், வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஒரு முறை விமான நிலையத்தில், அவசரமாக பிளைட்டை பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன். அப்போது, பலர் என்னுடன் புகைப்படம் எடுத்தார்கள். தாமதம் ஆகிவிட்டதால், ஒருவரிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன். அதை மட்டும் சுட்டிக்காட்டி, எங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டீர்களா? அப்புறம் எதுக்கு நடிக்க வந்தீங்க என்று கமெண்ட் போடுகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு இருக்கிறது. அவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
மோசமான கமெண்டுகள்: நடிகையாக இருப்பதால் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக படுமோசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். இதுவே அவர்களின் வீட்டில் மனைவிக்கோ, தங்கைக்கோ யாருக்காவது இந்த மாதிரி கமெண்ட் செய்திருந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அதுவும் முகத்தை மறைத்துக்கொண்டு, தைரியம் இருந்தால், நேரில் வந்து பேசட்டும், ஆனால், அப்படி செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு.
அயன் லேடி ஜெயலலிதா மேம்: அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த வரலட்சுமி, கட்டாயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. சினிமாவிலேயே இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் படங்களில் நடிக்க வேண்டும், படத்தை இயக்க வேண்டும் என்ன பல வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு, அரசியலுக்கு வருவேன். ஆனால், அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் ஆசை இல்லை. படித்தவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். வெளியில் இருந்து கொண்டு, யார் எது வேண்டுமானாலும் கருத்தை தெரிவித்து விடலாம். களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்குத் தான் அதனுடைய வேதனையும் வலியும் தெரியும். என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேம், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர்களுடைய பேட்டியை பார்த்தேன். உண்மை இல்லை அவர் ஒரு அயன் லேடி தான் என்று வரலட்சுமி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











