எவ்வளவோ சொன்னேன்.. அவர் மிதிச்சதுல எலும்பு உடைஞ்சிடுச்சு.. வரலட்சுமி சொன்ன தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், பாலாவின் இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படத்தில் நடித்த போது, எலும்பு உடைந்து மருத்துவமனை சென்றதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான போடா போடி படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

Actress Varalaxmi s old interview about acting in Thaarai Thapattai

வரலட்சுமி சரத்குமார்: இதையடுத்து, அதிரடியாக இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை பட வாய்ப்பு கிடைத்தது. கரகாட்ட கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சசிகுமார், வரலட்சுமி ஆகியோருடன் விஜய் டிவி அமுதவாணன், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்தை தொடர்ந்து, வில்லி அவதாரம் எடுத்த அவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

ஹிட் படங்களில்: வரலட்சுமி நடித்த விக்ரம் வேதா, சண்ட கோழி 2, சர்கார், மாரி 2, இரவின் நிழல் படங்களின் மூலம் கவனம் பெற்றார். இவர் கடைசியாக தெலுங்கில் வெளியான ஹனுமான் படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் படம் உட்பட தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தொழிலதிபருடன் திருமணம்: படங்களில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு, மும்பை தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன், திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் விமரிசையாக நடைபெற்றது. நிக்கோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, முதல் மனைவியான கவிதாவை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முதல் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டி மிதித்தார்: இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படம் குறித்து பேசி உள்ளார். அதில், சசிக்குமாரை விட்டு விட்டு ஆர்கே சுரேஷை திருமணம் செய்து கொள்வார். அப்போது, முதல் இரவு காட்சியில் வில்லன் ஆர்கே சுரேஷ், வரலட்சுமியை எட்டிமிதிப்பது போல ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த காட்சியின் போது நடந்த விஷயத்தை வரலட்சுமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

எலும்பு உடைந்தது: அந்த காட்சியின் போது, டேய் பாத்து மிதிடா ரொம் பீல் பண்ணி மிதிச்சிடாதேனு சொன்னேன். ஆனால், கேட்கல, மிதி மிதினு மிதிச்சான், அப்போவே கழுத்தில் ஒரு சத்தம் கேட்டது. ஆனால், அந்த ஷாட்டும் ஓகே ஆகாமல் அடுத்த ஷாட் எடுத்தாங்க, அந்த ஷாட் முடிஞ்சதும் பாலா தன் கழுத்தில் போட்டு இருந்த செயினை கழட்டி என் கழுத்தில் போட்டு பாராட்டினார். அப்போது நான் ஷாட் முடிச்சிடுச்சா சார் என்றேன், அவர் ஆமாம் என்றதும் மருத்துவமனைக்கு போய்ட்டுவரேன் என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வந்தேன் என்று வரலட்சுமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X